மற்றவர்களை விட இவர் 10 ரன்களை அடித்தது தான் மிகவும் முக்கியமான ஒன்று ; ஷிகர் தவான் பேட்டி

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகளில் இதுவரை வெற்றிகரமாக இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்று இரவு 7 மணியளவில் மூன்றாவது ஒருநாள் போட்டி போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியை ஷிகர் தவானும், வெஸ்ட் இண்டீஸ் அணியை நிக்கோலஸ் பூரான் வழிநடத்த உள்ளனர். இதற்கு முன்பு பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற அணிகளை எதிர்த்து விளையாடியுள்ளது.

அதில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் மோசமான தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது . அதேபோல தான் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இன்று நடைபெற உள்ள போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றாலும் தொடருக்கான கோப்பை இந்திய கிரிக்கெட் அணிக்கு தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இரண்டாவது ஒருநாள் போட்டியின் சுருக்கம்:

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கி சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து இந்திய அணியை திணறடித்தனர். அதிலும் ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் கேப்டன் நிக்கோலஸ் பூரான் சிறப்பாக விளையாடினார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 311 ரன்களை அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. குடில் ஹோப் 115, பூரான் 74 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரரான ஷிகர் தவான் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால் பின்னர் விளையாடிய சுமன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்தனர். அதனால் இந்திய அணிக்கு சற்று சாதகமாக மாறியது. ஆனால் முதல் 6 விக்கெட்டை இழந்த நிலையில் கடைசி 10 ஓவரில் 100 ரன்கள் தேவைப்பட்டது.

அப்பொழுது யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் அக்சர் பட்டேல் டி-20 போட்டியை போலவே 35 பந்தில் 64 ரன்களை விளாசினார். இறுதிவரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 49.4 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 312 ரன்களை அடித்தது இந்திய. அதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

போட்டி முடிந்த பிறகு தவான் கூறுகையில்; “அனைவரும் ஒரு அணியாக விளையாடினோம். என்னதான் இலக்கு எதிர்பார்க்காத வகையில் இருந்தாலும், அதனை சிறப்பாக எதிர்கொண்டு இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதிலும் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் தான் வெற்றிக்கு முக்கியமான காரணம்.”

“அதுமட்டுமின்றி, இந்த போட்டியின் மூலம் தான் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுகம் ஆனார் அவேஷ் கான், அவர் அடித்த 11 ரன்களும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம். ஏனென்றால், அவருக்கு இதுதான் முதல் போட்டி எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், அவரால் முடிந்தவரை பேட்டிங் செய்தார். இதற்கெல்லாம் ஐபிஎல் டி-20 தொடருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”

இருப்பினும் அவேஷ் கான் பவுலிங் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது தான் உண்மை. ஏனென்றால், 6 ஓவர் மட்டுமே பவுலிங் செய்த அவேஷ் கான் 54 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை, அதாவது கிட்டத்தட்ட ஓவருக்கு 10 ரன்களை கொடுத்துள்ளார். இவர் குறைவான ரன்களை கொடுத்திருந்தால் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here