HomeTrending Newsஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இவர் இந்திய அணியில் விளையாடாதது மிகப்பெரிய இழப்பு தான் ; இங்கிலாந்து...

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இவர் இந்திய அணியில் விளையாடாதது மிகப்பெரிய இழப்பு தான் ; இங்கிலாந்து வீரர் டேவிட் மலன்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3 மணியளவில் பர்மிங்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் அவரால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.

ரோஹித் சர்மாவின் இடத்தில் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார் ? என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர். ஆமாம், அதிலும் இந்திய அணியின் முக்கியமான வீரராக இருக்கும் ரோஹித் சர்மா அணியில் இல்லாதது இந்தியா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா ?

இதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலன் கூறுகையில் ; “ஒரு அணி தலைவன் போட்டியில் இல்லையென்றால் நிச்சியமாக வருத்தமாக தான் இருக்கும். அதுவும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றால் நிச்சியமாக அணிக்கு மிகவும் கடினமான விஷயம் தான்.”

“ரோஹித் சர்மா இந்திய அணியில் விளையாடாதது அவர்களுக்கு (இந்திய கிரிக்கெட் அணி ) பெரிய இழப்பாக தான் இருக்கும். இருப்பினும் இதற்கு முடிவு நேரம் தான் சொல்ல வேண்டும். ஆனாலும் இந்திய அணியில் இன்னும் சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.”

“குறிப்பாக திறமையான பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். அதனால் ரோஹித் சர்மா இல்லாததை அவர்கள் பாத்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார் டேவிட் மலன்.”

மலன் சொன்னது போல ரோஹித் சர்மா இல்லாத இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா ?? அதனை எப்படி சமாளிக்க போகிறது இந்திய ? ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சரியான மாற்று வீரர் யாராக இருக்க முடியும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img