நேற்று இரவு 7 மணியளவில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டி போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்..!


போட்டியின் சுருக்கம் :
முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இருப்பினும் அவ்வப்போது மழை பெய்த காரணத்தால் போட்டிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 36 ஓவர் மட்டுமே இரு அணிகளும் விளையாட முடியும் என்று முடிவு செய்தனர்.
அதில் இந்திய அணி 36 ஓவர் முடிவில் அதிரடியாக விளையாடி 3 விக்கெட்டை இழந்த நிலையில் 225 ரன்களை அடித்தனர். அதில் ஷிகர் தவான் 58, சுமன் கில் 98, ஸ்ரேயாஸ் ஐயர் 44, சூரியகுமார் யாதவ் 8, சஞ்சு சாம்சன் 6 ரன்களையும் அடித்துள்ளனர். பின்பு 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை மட்டுமே இழந்தனர். சிறப்பாக பவுலிங் செய்த இந்திய வீரர்கள் 26 ஓவரில் 10 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். அதனால் 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.


இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 22, பிராண்டன் கிங் 42, நிக்கோலஸ் பூரான் 42, கார்ட்டி 5, ஜேசன் ஹோல்டர் 9 ரன்களை அடித்துள்ளனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளனர். நாளை முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து ஐந்து டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் ; “இந்திய அணியில் அனைவரும் இளம் வீரராக இருந்தாலும், பெரிய அனுபம் வாய்ந்த வீரர்களை போல விளையாடுவது சிறப்பான விஷயம்.அதுவும் பீல்டிங் செய்யும்போது அவர்கள் விளையாடிய முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.”
“நான் இந்த மாதிரி விளையாடியது எனக்கும் பெருமையாக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நான் இந்த ஒருநாள் போட்டிகளில் பல ஆண்டுகளாகவே விளையாடி வருகிறேன். இன்றைய போட்டியில் சுமன் கில் விளையாடி 98 ரன்களை அடித்துள்ளார். அதனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.”


“எனக்கு தெரிந்து பவுலிங் வீரர்கள் தான் அவரது 100 சதவீதத்தையும் கொடுத்து விளையாடியுள்ளனர்.அதிலும் குறிப்பாக சிராஜ் கைப்பற்றிய அந்த இரண்டு விக்கெட்டை (மாயேர்ஸ் -0 மற்றும் சமர் ப்ரூக்ஸ்- 0) உண்மையிலும் பாராட்ட வேண்டிய விஷயம் தான். இவரையடுத்து ஷர்டுல் தாகூர் மற்றும் அனைத்து பவுலர்களும் சிறப்பாக விளையாடி உள்ளனர் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”
போட்டி தொடங்கும் முன்பு பேசிய தவான் கூறுகையில் ; ” இந்த இடத்தில் எங்கள் அணிக்கு எல்லாம் நல்லதாகவே நடந்து வருகிறது. அது எங்களுக்கு மிகவும் பாசிட்டிவ் ஆன விஷயம். எனக்கு தெரிந்து எங்களுது நோக்கம் சரியாக உள்ளது போல தான் தெரிகிறது. ராகுல் டிராவிட் அவரது வேலையை சிறப்பாக செய்து வருகிறார். அதிகபடியான வீரர்கள் விளையாடினால் தான், அதில் சிறந்த வீரரை தேர்வு செய்ய முடியும் என்று குறியுள்ளார் தவான்.”