யாரு சாமி நீ ? இப்படி வெறித்தமான பவுலிங் பன்றாரு ..! பாகிஸ்தான் அணியை அலறவிட்ட இந்திய பவுலர் ; இவர் ஒருத்தர் போதும் இனிமேல் ;

0

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இன்று மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி முதலில் டார்கெட் செட் செய்ய பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்து முடித்துள்ளனர். அதில் தொடக்க வீரரான ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் போன்ற வீரர்கள் பெரிய அளவில் தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தாத காரணத்தால் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக இருந்தது.

ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 159 ரன்களை அடித்துள்ளனர். அதில் முகமத் ரிஸ்வான் 4, பாபர் அசாம் 0, மசூத் 52, அகமத் 51, ஷதாப் கான் 5, ஹைடர் அலி 2, ஷாஹீன் அப்ரிடி 16 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

இதில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக அமைந்தது தான் உண்மை. அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சுக்கு தான் சாதகமாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்ற முடிந்தது. அதிலு குறிப்பாக இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷதீப் சிங் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

குறிப்பாக ரிஸ்வான், பாபர் அசாம் போன்ற இரு முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியதால் தான் 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. அப்படி இல்லையென்றால் குறைந்தது 200-க்கு மேற்பட்ட ரன்களை சுலபமாக அடித்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, கடந்த சில போட்டிகளாவே அர்ஷதீப் சிங் பவுலிங்கில் முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது.

4 ஓவர் பவுலிங் செய்த அர்ஷதீப் சிங் 32 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதனால் இனிவரும் போட்டிகளில் முக்கியமான பவுலராகவும் பும்ராவிற்கு பிறகு இந்தியாவின் நம்பிக்கையான பவுலராக வளம் வர அர்ஷதீப் சிங்-இற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இறுதி ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் அணியை வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here