இதற்கு மேல் இவரை நம்பினால் இந்திய அணிக்கு ஆபத்து தான் ; மோசமான நிலையில் இருக்கும் இவரது பேட்டிங் ; ரசிகர்கள் வருத்தம் ;

0

இன்று இரவு 8 மணியளவில் நடைபெற ஐந்தாவது டி-20 போட்டி சென்ட்ரல் ப்ரோவ்ர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதுவரை நடந்த போட்டியில் 3 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பதால் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அதனால் இன்றைய போட்டி ஒன்றும் முக்கியமில்லை.

முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் களமிறங்கி சிறப்பாக விளையாடினார்கள். அதில் இஷான் கிஷான் 11 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் எந்த போட்டியிலும் இல்லாத அளவிற்கு இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடினார்.

அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டு சென்றனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 188 ரன்களை அடித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. வெஸ்ட் இண்டீஸ் அணி 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளனர்.

இதில் இஷான் கிஷான் 11, ஸ்ரேயாஸ் ஐயர் 64, தீபக் ஹூடா 38, சஞ்சு சாம்சன் 15, ஹர்டிக் பாண்டிய 28, தினேஷ் கார்த்திக் 12, அக்சர் பட்டேல் 9 ரன்களையும் அடித்துள்ளனர். இந்த போட்டியை விட இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் தான் இந்திய கிரிக்கெட் அணி அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஏனென்றால் கடந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் மோசமான நிலையில் அரை இறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாத நிலையில் தொடரில் இருந்து வெளியேறினார்கள். அதனால் இந்த ஆண்டு கோப்பையை வெல்ல அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது பிசிசிஐ. அதுமட்டுமின்றி, இந்திய அணிக்கு நல்ல ஒரு பினிஷர் கிடைத்துவிட்டதாக அனைவரும் நம்பிக்கொண்டு வருகின்றனர்.

ஆமாம் இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். தென்னாபிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார் தினேஷ் கார்த்திக். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரசிகர்கள் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

முதல் டி-20 போட்டியில் 41 ரன்களை அடித்த தினேஷ் கார்த்திக், மூன்றாவது, நான்காவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்து கொண்டு வருகிறார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் 41*,7,6,12 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

நல்ல பினிஷர் இந்த ஆண்டு நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என்று பலர் நினைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த மாதம் இறுதியில் நடைபெற போகின்ற ஆசிய கோப்பைக்கான போட்டியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதில் சரியாக விளையாடினால் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டியிலும் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here