வீடியோ: 95 மீட்டர் சிக்ஸர் அடித்த சஹர்… கேலரியில் நின்னு சலுயூட் அடித்த ரோகித் சர்மா!!! வீடியோ உள்ளே..

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 95 மீட்டர் சிக்ஸர் அடித்து அசத்திய தீபக் சஹரின் வீடியோ கீழே உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி சார்பில் துவக்க வீரரும் கேப்டனுமான ரோகித் சர்மா 56 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. பின்னர் வந்த ஹர்ஷல் பட்டேல் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆட்டத்தின் 20வது ஓவரில் தீபக் சஹர் 95 மீட்டர் சிக்ஸர் விளாசினார். இதனை கேலரியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ரோஹித் சர்மா எழுந்து நின்று கைதட்டி வரவேற்று, சஹருக்கு சலுயூட் அடித்தார். இதன் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் நன்கு பகிரப்பட்டு வருகிறது. 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது.

இரண்டாவது பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப் பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 17.2 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நியூசிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. அதிகபட்சமாக, மார்டின் கப்தில் 51 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணிக்கு சிறப்பாக பந்து வீசிய அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

டி20 தொடருக்கு பிறகு, இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரிஷப் பந்த் மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.