இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் கடந்த 24ஆம் தேதி அன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தனர்.

தொடக்க வீரரான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. ஆனால் மசூத் மற்றும் அகமத் போன்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு ரன்கள் குவிந்தன. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 159 ரன்களை அடித்தது பாகிஸ்தான் அணி.
பின்பு 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. பாகிஸ்தான் அணியை போலவே இந்திய கிரிக்கெட் வீரர்களும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். அதுவும் நம்பிக்கை நாயகன் சூர்யகுமார் யாதவ் ஆட்டம் இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவரும் இணைந்து ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். அதனால் இறுதி ஓவரில் இறுதி பந்து வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்களை அடித்து 4விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற சம்பவம் :
இறுதி ஓவரில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இந்திய. ஆனால் ஹர்டிக் பாண்டிய எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். பின்பு தினேஷ் கார்த்திக் மற்றும் விராட்கோலி விளையாடினர். அப்பொழுது Wide பந்தை அடிக்க முயன்ற போது தினேஷ் கார்த்திக்கும் விக்கெட்டை இழந்தார்.

பின்பு ரவிச்சந்திரன் அஸ்வின் 1 பந்துகள் மீதமுள்ள நிலையில் விளையாடினார். நவாஸ் வீசிய பந்தை சரியாக கவனித்த ரவிச்சந்திரன் அஸ்வின் Wide என்று கருதி அதனை தவிர்த்தார். அதனால் 1 பந்தில் 1 ரன்கள் என்ற நிலை இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டது.
இறுதி பந்தில் 1 ரன்களை அடித்த நிலையில் இந்திய 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் ; ஒருவேளை நவாஸ் வீசிய பந்து காலில் அடித்திருந்தால் (விக்கெட்). நான் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மிக்க நன்றி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல விதமான விஷயங்கள் நடைபெற்றுள்ளது நன்றி என்று சொல்லிருப்பேன். (ஓய்வை அறிவித்திருப்பேன்) என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

மேலும் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை இழந்ததை பற்றி பேசிய அஸ்வின் : “நான் தினேஷ் கார்த்திக் முடித்துவிடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் விக்கெட் இழந்து பிறகு நான் அவரை படுபாவி என்று கூறினேன். அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் சரியாக செயல்பட்டால் வெற்றிபெறலாம் என்று நான் நம்பினேன்.”
“அதுமட்டுமின்றி முதல் 45 பந்துவரை பொறுமையாக விளையாடிய விராட்கோலி, அதற்குமேல் ஆவி புகுந்தது போல அப்படி அதிரடியாக ரன்களை குவித்தார் என்று புகழ்த்துப்பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.” பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெல்ல ரவிச்சந்திரன் அஸ்வினின் பங்களிப்பும் மிகவும் முக்கியமான ஒன்று தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
0 Comments