விராட் கோலி மட்டும் இல்லை என்றால் நான் ஒன்னும் இல்லை..! மனம் திறந்த இந்திய வீரர் ; முழு விவரம் இதோ..!

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்திய அணி வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பையை கைப்பற்றுமா ??

இந்திய அணியில் இளம் வீரரான முகமது சிராஜ் , இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளப்பட்ட இந்தியா அணியில் இவரும் இடம்பெற்றார். அதில் பல முக்கியமா விக்கெட்டை கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றி காரணமாக இருந்துள்ளார் சிராஜ்.

இளம் வீரரான மும்மது சிராஜ், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உதவிய வீரரை கைகாட்டியுள்ளார்…! அதுமட்டுமின்றி பல சுவார்ஸமான விசியங்களை பகிர்ந்துள்ளார். அதில் ” நான் ஆஸ்திரேலியா நாட்டில் விளையாடி கொண்டு இருந்த போது, என்னுடைய தந்தையின் மரண செய்தியை கேட்டு நான் மிகவும் சோகமாக இருந்தேன்”.

அப்பொழுது விராட் கோலி என்னிடம் வந்து நம்பிக்கையும், ஆறுதலையும் கூறினார். அதுமட்டுமின்றி நான் விராட் கோலிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் நான், ஹோட்டல் ரூமில் அழுது கொண்டு இருந்தேன். அப்பொழுது விராட் கோலி என்னை கட்டி அனைத்து நான் உன்னுடன் எப்பையும் இருப்பேன் என்று கூறினார்.

விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய திரும்பிவிட்டார். ஆனால் எப்பொழுதும் எனக்கும் கால் மற்றும் மெஸ்ஏஜ் செய்து என்னையும் என்னுடைய விளையாட்டை பற்றி கேட்டு ஊக்கப்படுத்துவர் விராட் , அந்த நேரத்தில் அவரது ஆறுதல் மெஸ்ஏஜ் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது என்று கூறியுள்ளார் முகமது சிராஜ்.

நான் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் விளையாட உள்ளேன். அதனால் நிச்சியமாக என்னுடைய 100% சதவீதம் விளையாட்டை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.