Dhoni கிட்ட இதை நான் கேட்டான் ; ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டார் ; கான்வே ஓபன் டாக் ;

சென்னை அணி எந்த ஆண்டிலும் நடக்காத ஒருநிகழ்வு இந்த முறை நடந்து முடிந்துள்ளது. ஆமாம், இதுவரை மொத்தம் 14 முறை ஐபிஎல் போட்டிகளில் நடந்து முடிந்து இப்பொழுது 15 வது சீசனில் அடியெடுத்துவைத்துள்ளது ஐபிஎல் போட்டிகள். இதுவரை சென்னை அணி முதல் இரு போட்டிகளிலும் தோல்விகளை பெற்றதே இல்லை.

ஆமாம், ஆனால் இந்த ஆண்டு கொல்கத்தா மற்றும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது சென்னை. நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை அடித்து தொம்சம் செய்தனர்…!

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ராபின் 50, ஷிவம் துபே 49 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு 19.3 ஓவர் முடிவில் 211 ரன்களை அடித்தனர்.

அதனால் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது லக்னோ அணி. சென்னை அணியை பற்றி பேசிய டேவன் கன்வே மற்றும் ஆடம் மில்ஸ் அளித்த பேட்டியில் ; ஆடம் மில்னே கூறுகையில் “சென்னை அணியில் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.”

“எங்கள் (நியூஸிலாந்து) நாட்டை சேர்ந்த வீரர்கள் அனைத்து அணியிலும் உள்ளனர். அதனால் எங்கள் ஊரில் இருப்பது போல தான் நன் உணர்கிறேன். நான் தோனிக்கு எதிராக பல போட்டிகளிலும் விளையாடியுள்ளேன். ஆனால், இந்த முறை அவரது அனுபவத்தை நேரடியாக என்னால் பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார் ஆடம் மில்னே.”

பின்னர் டேவன் கான்வே கூறுகையில் :”சென்னை அணியில் அதுவும் தோனிக்கு கீழ் விளையாட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் ஆசைப்பட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் இந்த முறை நான் சென்னை அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.”

ஆனால் இந்த முறை தோனி கேப்டனாக இல்லாதது தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இந்த ஒரு ஆண்டு மட்டும் கேப்டனாக இருக்கலாம் என்று நன் தோனியிடம் கூறினேன். அதற்கு அவர் (தோனி ) இல்லை, நான் அணியில் தான் இருக்கிறேன். பிளெம்மிங், ஜடேஜா, லட்சுமிபதி பாலாஜி போன்ற வீரர்களிடன் நான் பேசிக்கொண்டு அணியில் தான் இருப்பேன் என்று கூறினார்.

ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் டோனி போன்ற லெஜெண்ட் கீழ் நான் விளையாடி வருகிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார் டேவன் கான்வே.