ஆசிய கோப்பையில் இவரது கம்பேக் வேற மாதிரி இருக்கும் ; எனக்கு நம்பிக்கை உள்ளது ; கங்குலி பேட்டி ;

0

வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் இந்திய மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான முன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் ஜிம்பாபே தொடரில் விளையாட போகும் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது.

அதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற ஐந்து அணிகள் உறுதியான நிலையில் 6வதாக நான்கு அணிகளுக்கு இடையே தகுதி சுற்றுகள் நடைபெற உள்ளது. அதில் ஒரே அணி மட்டுமே 6வது இடத்தில் இடம்பெறும்.

இதுவரை 7 முறை ஆசிய கோப்பைக்கான போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய. கடந்த 2018ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பைக்கான தொடரை கைப்பற்றியது. சமீபத்தில் தான் ஆசிய கோப்பையில் விளையாட போகும் இந்திய அணியின் வீரர்களை பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

அதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் கிட்டத்தட்ட அனைவரும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் தான். ஆனால் விராட்கோலி என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆமாம், கடந்த இரு ஆண்டுகளாக விராட்கோலியால் சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார். அதிலும் கடந்த சில போட்டிகளில் விராட்கோலியின் விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

கம்பேக் கொடுப்பாரா ? என்று பலர் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் பலர் விராட்கோலிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி சில முக்கியமான தகவலை கூறியுள்ளார். அதில் “விராட்கோலி முடிந்தவரை பயிற்சி செய்யட்டும், அதேபோல போட்டிகளிலும் விளையாட்டும்.”

“விராட்கோலி இந்திய அணிக்காக விளையாடி அதிக ரன்களை அடித்துள்ளார். இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் தான் விராட்கோலி. அதனால் நிச்சியமாக கம்பேக் கொடுப்பார். என்னதான் இவ்வளவு நாட்கள் சதம் அடிக்க முடியவில்லை என்றாலும் நிச்சியமாக ஆசிய கோப்பையில் அவரது போர்மில் மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளார் கங்குலி.”

இங்கிலாந்து அணிக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே போன்ற தொடரில் விளையாடாத விராட்கோலி நேரடியாக ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் விளையாட போகிறார். கம்பேக் கொடுப்பாரா விராட்கோலி ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here