அவங்க இரண்டு பேரை பற்றி என்னிடம் எதுவும் பேச வேண்டாம் ; அது எனக்கு தெரியாது ; விராட்கோலி அதிரடி பேட்டி ; என்ன நடந்தது ?

0

ஒருவழியாக இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடர் முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

இறுதி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதல் இன்னிங்ஸ்-ல் இந்திய அணி 223 ரன்களை அடித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாடிய சவுத் ஆப்பிரிக்கா அணி 210 ரன்களை அடித்தது. இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய அணி 198 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர். ஆனால் அதில் ரிஷாப் பண்ட் மட்டும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடி வந்தார்.

அதன்பின்னர் 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணி. 63.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 212 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி. போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி அளித்த பேட்டியில் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

போட்டியை பற்றி விராட்கோலி கூறுகையில் ; போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமே இந்திய அணியின் பேட்டிங் தான் என்று கூறினார் விராட்கோலி. மேலும் ரஹானே மற்றும் புஜரா இந்திய அணியில் இருப்பார்களா இல்லையா ? என்ற கேள்விக்கு பதிலளித்த விராட்கோலி,

என்னால் இங்கு உட்கார்ந்து அவர்களது (புஜரா மற்றும் ரஹானே) எதிர்காலத்தை பற்றி என்னால் பேச முடியாது. என்னால் இங்கு அதனை பற்றி பேச முடியாது. இந்த கேள்வியை அணியின் தேர்வளர்களிடம் தான் கேட்கவேண்டும், அது என்னுடைய வேலை இல்லை. முன்பும் இப்பொழுதும் சரி, ஒரே நோக்கம் தான், இந்திய அணியாக நாங்கள் எப்பொழுதும் புஜரா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் நாங்கள் எப்பொழுதும் ஆதரித்து கொண்டே தான் இருப்போம்.

ஏனென்றால் அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக பல முறை பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். அவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்ட்னெர்ஷிப் செய்து மாஸ் ஆக பாட்டிங் செய்தனர். அதனால் தென்னாபிரிக்கா அணியை எதிர்த்துபோராட காரணமாக இருந்தது. அதனால் அணியின் தேர்வாளர்கள் எப்படி அணியை தேர்வு செய்வார்கள் என்பதை பற்றி என்னால் பேச முடியாது, அது என் கையில் இல்லை என்று வெளிப்படையாக பேசினார் விராட்கோலி.

வருகின்ற 19ஆம் தேதி முதல் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல் தான் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here