நான் எப்படி அந்த வார்த்தையை சொல்லவேன் ; என்னால் அதனை ஒருபோதும் சொல்ல முடியாது ; ராகுல் டிராவிட் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 182 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக விராட்கோலி 60, ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் தலா 28 ரன்களை அடித்துள்ளனர். பின்பு இப்பொழுது 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது பாகிஸ்தான் அணி.

இதற்கு முன்பு ஆசிய கோப்பை போட்டியின் இரண்டாவது போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஈசல் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ” ஜடேஜாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இனிவரும் போட்டிகளில் அவரால் விளையாட முடியாத காரணத்தால் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் இப்பொழுது இந்திய அணியின் மருத்துவ குழு கண்காணிப்பில் இருக்கிறார்.”

“பின்பு பாகிஸ்தான் பவுலிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்திய வீரர்களும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 147 ரன்களில் மடக்கினோம். எதிர் அணியை எந்த ரன்களில் கட்டுப்படுத்தினோம் என்பதை விட பவுலிங் எப்படி இருந்தது என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்றாக தெரிகிறது.”

“முடிவுகளை வைத்து தான் எப்படி விளையாடினோம் என்பது தெரிய வரும். எங்கள் [பவுலிங் ஆலோசனையில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக தான் பவுலிங் செய்து வருகின்றனர். நான் எப்பொழுதும் பாகிஸ்தான் பவுலர்களை மதிப்பேன். ஆனால் இந்திய அணியிலும் சிறந்த பவுலர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதில் மாம் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”

“இந்த இடத்தில் ஒரு வார்த்தையை பயன்படுத்த நினைக்கிறன். ஆனால் என்னால் அந்த வார்த்தையை மட்டும் பயன்படுத்தவே முடியவில்லை. என்னுடைய மனதில் இருந்து வெளிவருகிறது. ஆனால் இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அந்த வார்த்தையின் முதல் எழுத்து “S” என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”

“பின்பு ஆவேச கானை பற்றி பேசிய ராகுல் ; “இப்பொழுது அவர் கொஞ்சம் சரியில்லாமல் இருக்கிறார். அதனால் தான் இன்று பயிற்சி கூட செய்யவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். அதனால் ரொம்ப சீரியஸ் என்று நினைத்துகொள்ள வேண்டாம். அடுத்த சில போட்டிகளில் அவர் அணியில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.”

கடந்த இரு பேட்டிகளிலும் ஆவேஷ் கான் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதிக ரன்களை கொடுத்து வருகிறார் ஆவேஷ் கான். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாராவது இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here