HomeTrending Newsஇந்த சம்பவத்தை மட்டும் எப்பொழுதும் நான் மறக்கவே மாட்டேன் ; ரிஷாப் பண்ட் ஓபன் டாக்...

இந்த சம்பவத்தை மட்டும் எப்பொழுதும் நான் மறக்கவே மாட்டேன் ; ரிஷாப் பண்ட் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த டி-20 தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேற்று இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட்டை அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி வழக்கம் போலவே பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பரிஸ்டோவ், ஜோவ் ரூட் ஆகிய இருவரும் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அதனால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் அதன்பின்னர் விளையாடிய அனைத்து வீரர்களும் பார்ட்னெர்ஷிப் செய்து அவர்களால் முடிந்தவரை ரன்களை அடித்து குவித்தனர். அதனால் 45.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் இங்கிலாந்து அணியால் 259 ரன்களை அடிக்க முடிந்தது.

அதில் ஜேசன் ராய் 41, பென் ஸ்டோக்ஸ் 27, பட்லர் 60, மொயின் அலி 34, லிவிங்ஸ்டன் 27, வில்லே 18, ஓவெர்ட்டன் 32 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இங்கிலாந்து அணியை போலவே டாப் மூன்று பேட்ஸ்மேன்களும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர்.

ஆனால் ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பந்தியாவின் அதிரடியான ஆட்டத்தால் தான் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.ஆமாம், ரிஷாப் பண்ட் 125 ரன்களையும், ஹர்டிக் பாண்டிய 71 ரன்களை அடித்துள்ளார். 42.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 261 ரன்களை அடித்து இங்கிலாந்து அணியை 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வென்றது இந்திய.

அதில் ரோஹித் சர்மா 17, ஷிகர் தவான் 1, விராட்கோலி 17, ரிஷாப் பண்ட் 125, ஹர்டிக் பாண்டிய 71, ரவீந்திர ஜடேஜா 7 ரன்களையும் அடித்துள்ளனர். அதனால் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்தியா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கூறுகையில் ; “சத்தியமாக இந்த போட்டியை மட்டும் நான் எப்பொழுதுமே எதிர்பார்க்க மாட்டேன். எனது அணி மோசமான நிலையில் இருக்கும்போது இந்த மாதிரி சிறப்பாக விளையாடியது, எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.”

“நான் எப்பொழுதும் இங்கிலாந்து நாட்டில் விளையாட ஆசைப்டுவேன். அதிக போட்டிகளில் விளையாடினால் தான் அனுபவம் கிடைக்கும், அப்போதுதான் எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டுமென்று தெரியும். எங்கள் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களும் சிறப்பாக விளையாடினர். முடிந்தவரை ரன்களை கொடுக்காமல் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தனர். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் மட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img