எங்களுக்கு இந்த வீக்னெஸ் இருப்பது போல தெரியவில்லை ; ஆனால் அதில் இருந்து மீண்டு வருவோம் ; ரோஹித் சர்மா பேட்டி ;

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டிகள் இன்று இரவு 9:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் தலா 1 போட்டியில் இரு அணிகளும் வென்றுள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகள் நிச்சியமாக இரு அணிகளுக்கும் சவாலாக தான் இருக்க போகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டன் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்கிறோம். ஏனென்றால் சூழ்நிலை அப்படி இருக்கிறது. இது ஒரு சின்ன மைதானம், அதனால் சுலபமாக சிக்ஸர் அடிக்க முடியும். ஆனா, இந்த மைதானத்தில் பெரிய அளவில் ரன்களை அடித்தது இல்லை.”

“இந்திய கிரிக்கெட் அணிக்கு இடது கை பவுலர்களால் பிரச்சனை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு அணியாக அனைத்து விதங்களிலும் முன்னேற வேண்டும். ஆனால் கடந்த சில போட்டிகளில் இடது கை பவுலர்கள் எங்களுக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர்.”

“இதனால் இந்திய வீரர்கள் ரன்களை அடிக்க முடியாமல் கிடையாது, அவர்கள் விரைவாக ரன்களை அடிக்க நினைக்கின்றனர். அதனால் பவுலர்களுக்கு ஏற்ப விளையாட வேண்டும். இந்த போட்டியில் ஜடேஜாவிற்கு ஓய்வு கொடுத்துள்ளோம், அதனால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம்பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

இன்றைய மூன்றாவது டி-20 போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் : ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here