HomeTrending Newsதோனி இப்படி செய்வார் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை ; எனக்கு ஒன்னும் புரியவில்லை ;...

தோனி இப்படி செய்வார் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை ; எனக்கு ஒன்னும் புரியவில்லை ; ஷோயப் அக்தர் பேட்டி ;

ஐபிஎல் 2022 : நேற்று இரவில் தொடங்கியது ஐபிஎல் 2022 திருவிழா. அதனால் இன்னும் இரு மாதங்களுக்கு விறுவிறுப்பான நிகழ்வுக்கு நிச்சயமாக பஞ்சம் இருக்காது. 15வது சீசன் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்-கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. நேற்று பனி அதிகமாக இருந்த காரணத்தால் சென்னை அணியால் அதிக ரன்களை அடிக்க முடியாமல் போனது.

அதிலும் தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் டேவன் கான்வே போன்ற இரு பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் 12 ஓவருக்கு பிறகு சென்னை அணியின் பினிஷர் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்தனர்.

அதில் தோனி அதிகபட்சமாக 50 ரன்களை அடித்துள்ளனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 131 ரன்களை அடித்துள்ளது சென்னை. பின்பு 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. அதில் இறுதிவரை போராடிய கொல்கத்தா 18.3 ஓவர் முடிவில் 133 ரன்களை அடித்தது.

அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா. இந்த போட்டிக்கு நடக்கும் இரு நாட்களுக்கு முன்பு தான் தோனி தனது கேப்டன் பதவியை சென்னை அணியின் ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கையில் எடுத்துக்கொண்டார்.

அதனால் சென்னை அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக தான் இருந்தது தான் உண்மை. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை பற்றி பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷோயப் அக்தர் கூறுகையில் ;

“ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் ஆரம்பிக்க இரு நாட்கள் இருக்கும் நிலையில் எதற்கு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ? உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சத்தியமாக அவர் ஏன் இப்படி முடிவு எடுத்தார் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை.”

எனக்கு தெரிந்து சென்னை அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பை மற்ற வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு , இருக்கும் இன்னும் சில ஆண்டுகள் நிம்மதியான விளையாட்டை விளையாட முடிவு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார் ஷோயப் அக்தர்..!

மேலும் புதிய கேப்டனான ரவீந்திர ஜடேஜா பற்றி பேசிய ஷோயப் அக்தர் ; “தோனிக்கு பிறகு சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா வழிநடத்துவது நல்லது தான். நிச்சியமாக சென்னை அணியை முன்னேறிக்கொண்டு செல்வார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்கள் நம்பக்கூடிய வீரர்களுள் தோனியும் ஒருவர் தான் என்று கூறியுள்ளார் ஷோயிப் அக்தர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img