வேண்டாம் விடுங்க..! இதை பற்றி பேச விருப்பமில்லை ; விராட்கோலி ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, இன்னும் சில நாட்களே உள்ளது அரை இறுதி சுற்றுக்கு அதனால் அனைத்து அணிகளும் போட்டிபோட்டுக்கொண்டு விளையாடி வருகின்றனர்.

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7:30 மணியளவில் நடைபெற்ற போட்டியில் கெய்ல் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியும், விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கியது கெய்ல் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி. சரியான பேட்டிங் மற்றும் பார்ட்னெர்ஷிப் இல்லாததால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். அதனால் 17.4 ஓவர் முடிவில் 85 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது ஸ்காட்லாந்து.

பின்னர் 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்று களமிறங்கியது இந்திய அணி. அதில் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடியதால் 6.3 ஓவரில் 89 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றினார்கள். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி இப்பொழுது புள்ளிபட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது….!

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ; இன்றைய போட்டி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் 7ஆம் தேதி அன்று என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.

ஏனென்றால் எங்களுக்கு நன்கு தெரியும், நாங்கள் எப்படி விளையாடினோம் என்று. இதில் இருந்து புரிந்திருக்கும் டாஸ் எவ்வளவு முக்கியம் என்று. எப்படியாவது 110 அல்லது 120 ரன்களுக்குள் அவர்களை வைக்க வேண்டும் என்று தான் முடிவு செய்தோம். அதேபோல நடந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் பவுலர்களும் சிறந்த முறையில் விக்கெட்டை கைப்பற்றி ஸ்காட்லாந்து அணியை அதிக ரன்களை அடிக்க முடியாமல் தடுத்துள்ளனர்…! என்று கூறியுள்ளார் விராட்கோலி….!

அடுத்த போட்டி வருகின்ற 7ஆம் தேதி அன்று நமீபியா அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய. அதில் வெற்றியை கைப்பற்றுமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!