சிஎஸ்கே அணியில் இவர் இருப்பது சரியாக இருக்காது..! : பிரெட் லீ கருத்து..!! ஐயோ இவர் அணியில் இருக்க கூடாது.. ப்ளீஸ்.!!!

சிஎஸ்கே அணியில் இவர் இருப்பது சரியாக இருக்காது..! : பிரெட் லீ கருத்து..!! ஐயோ இவர் அணியில் இருக்க கூடாது.. ப்ளீஸ்.!!!

கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கின்றனர்.

முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சென்னையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 27 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 17 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் 10 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வென்றுள்ளது.

அதனால் நிச்சியமாக இன்றைய போட்டிக்கு விறுவிறுப்பான நிகழ்வுக்கு பஞ்சம் இருக்காது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

அதனால் சிஎஸ்கே அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போய்விட்டது. அதனால் இந்த ஆண்டு நிச்சயமாக காம் பேக் ஆக சிஎஸ்கே வரும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் சிஎஸ்கே அணியில் புதிதாக ராபின் உத்தப்ப, ஹாரி ஷங்கர் ரெட்டி, மெயின் அலி,கிருஷ்ணப்ப கவுதம் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ சமீபத்தில் அளித்த பேட்டியில் ; சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்துள்ள புஜாராவை பற்றிய கருத்தை கூறியுள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் XI
பஞ்சாப் அணியில் விளையாடிய புஜாரா அதன்பின்னர் எந்த அணியிலும் இடம்பெறவில்லை.

அதனால் 6 வருடங்கள் கழித்து மீண்டும் சிஎஸ்கே அணியால் இந்த முறையில் அணியில் இணைந்துள்ளார். அவர் இந்த ஆறு ஆண்டுகள் விளையாடாத இவர் எப்படி டி-20 போட்டிகளில் பங்கேற்க முடியும் ? இவர் ஒரு அருமையான வீரர் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் இதனை இரண்டு வகையாக பார்க்க வேண்டும். அவர் ஒரு சிறந்த வீரர். அவருக்கு பேட்டிங் எந்த நேரத்தில் எப்படி செய்ய வேண்டும் என்று நன்கு தெரியும். இன்னோரு பக்கம் பார்க்கும்போது, அவர் டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளார். ஆனால் இது டி-20 போட்டி, 90 நிமிடம் மற்றும் 20ஓவர் போட்டிதான்.

அதனால் நிச்சியமாக சிஎஸ்கே அணியில் பதினோரு பேரில் இவர் இருப்பாரா என்பதில் சந்தேகம் தான் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார். சிஎஸ்கே அணிக்கு முதல் போட்டி நாளை இரவு 7:30 மணியளவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.