இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 1ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடக்க வீரரான புஜாரா 13 மற்றும் சுமன் கில் 17 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டத்தை இழந்தனர். பின்னர் விராட்கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி போன்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்து வந்தனர்.
ஆனால் ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகிய இருவரின் ஆட்டத்தால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தன. அதுமட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவிற்கு இதுதான் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான சதம். ஜடேஜா விளையாடிய ஆட்டத்தை அனைவரும் வரவேற்கின்றனர்.


இதனை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் : “எனக்கு தெரிந்து ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்-ல் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர் (ஜடேஜா) சரியாகவும் சிறப்பாகவும் விளையாடி வருகிறார். முன்பு அவர் எப்பொழுது 8வதாக பேட்டிங் செய்வது வழக்கம்.”
“ஆனால் அப்படி பேட்டிங் செய்தால் அவருக்கு சரியாக நேரம் அமையாமல் போய்விடுகிறது. அதனால் அவருக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போகிறது. இப்பொழுது தான் அவரது பேட்டிங் ஆர்டர் சரியாக இருப்பதாக நான் நினைக்கிறன் என்று கூறியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.”


முதல் இன்னிங்ஸ் போட்டியில் 7வதாக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 194 பந்தில் 104 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் போட்டியில் சுறுசுறுப்பாக விளையாடி வருகின்றனர். ஆமாம், 45.3 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 200 ரன்களை அடித்துள்ளனர்.
அதில் அதிகபட்சமாக பரிஸ்டோவ் 91, பென் ஸ்டோக்ஸ் 25, ஜோ ரூட் 31, சாக் 9 ரன்களை அடித்துள்ளனர். இன்னும் 4 விக்கெட் மீதமுள்ள நிலையில் 216 ரன்கள் வித்தியாசம் உள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் யார் வென்று தொடரை கைப்பற்ற போகிறார்கள் ?
அதிரடியாக விளையாடி வரும் பரிஸ்டோவ் விக்கெட்டை கைப்பற்றி இங்கிலாந்து அணியை விழ்த்துமா இந்திய கிரிக்கெட் அணி ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கபடுகிறது. அதனால் மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!