இது எனக்கும் தெரியாது ; நான் கேப்டனுக்கு புதுசு ; தோல்விக்கு இதுதான் காரணம் ; ஜோஸ் பட்லர் பேட்டி

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. முதல் இரு விக்கெட்டை விரைவாக இழந்தாலும் ஒருவர் பின் ஒருவராக அதிரடியாக விளையாட தொடங்கினார்கள்.

அதனால் இறுதி வரை விளையாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 259 ரன்களை அடித்தனர். அதில் ஜேசன் ராய் 41, பரிஸ்டோவ் 0, ரூட் 0, பென் ஸ்டோக்ஸ் 27, ஜோஸ் பட்லர் 60, மொயின் அலி 34, லிவிங்ஸ்டன் 27, வில்லே 18 ரன்களை அடித்தனர்.

பின்பு 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்க வீரரான ஷிகர் தவான் எதிர்பாராத வகையில் 1 ரன்களை அடித்த நிலையில் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்வார்கள் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆனால், இருவரும் தலா 17 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்தனர். அதனால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய இருவரும் செய்த அதிரடியான ஆட்டத்தால், இந்திய அணி வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியது. ஆமாம், 42.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 261 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது இந்திய.

போட்டி முடிந்த பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோஸ் பட்லர் கூறுகையில் ; “நாங்க இன்னும் கொஞ்சம் ரன்களை அடித்திருக்க வேண்டும். எப்பொழுது தொடக்க ஆட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தொடர் முழுவதும் நாங்க ஒழுங்கவே பேட்டிங் செய்யவில்லை.”

“ஆனால் எங்கள் அணி வீரர் டூப்லெய் சிறப்பாக விளையாடினார், ஒருநாள் மட்டுமின்றி டி-20 போட்டிகளிலும் கூட. ஒரு சிறந்த வீரருக்கு வாய்ப்பு கொடுத்தால் அதில் நிச்சியமாக ஏமாற்றம் ஏற்படும். ஆனால் இந்திய அணியில் பாதி வாய்ப்பு ஹர்டிக் பாண்டியாவுக்கும், மீதமுள்ள பாதியை ரிஷாப் பண்ட் -க்கும் கொடுத்தது சரியான ஒன்றாக மாறியது.”

“நிச்சியமாக இந்த வாய்ப்பை தவறவிட்டோம். ஆனால் ஒருபோதும் இதில் கேப்டனுக்கு சம்பந்தம் கிடையாது. அதாவது வாய்ப்பை தவறவிடத்திற்கு கேப்டன் பதவிவைத்து ஒன்னும் செய்ய முடியாது. நான் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் தான், ஆனால் கேப்டன் பதவிக்கு புதுசு. எங்கள் அணியில் ரஷீத் மீண்டும் வந்தது மிகவும் சந்தோசமாக உள்ளது என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here