HomeTrending Newsஇவர் எதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளையாட வேண்டும் ; முன்னாள் வீரர் ஆவேசம்...

இவர் எதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளையாட வேண்டும் ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டியான விறுவிறுப்பாக போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

சமீபத்தில் தான் ஜிம்பாபே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாட போகும் இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் தான் கேப்டன் என்று அறிவித்தது பிசிசிஐ.

ஆனால் எதிர்பாராத விதமான தீடிரென்று கே.எல்.ராகு பிட்னெஸ் ஆக இருப்பதால் ஆசிய கோப்பை போட்டிக்கு முன்பு ஜிம்பாபே தொடரில் விளையாடட்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது. அதனால் ஷிகர் தவணை துணை கேப்டனாகவும், கே.எல்.ராகுலை கேப்டனாகவும் நியமித்தது பிசிசிஐ.

Kl Ragul

கே.எல்.ராகுல் கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. அப்படி இருக்கும் நிலையில் எப்படி ஆசிய கோப்பையில் மட்டும் இவரது பெயர் இடம்பெற்றது என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தீடிரென்று தவானை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியதை பற்றி முன்னாள் வீரர் சிலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “கேப்டன் பதவி என்கையில் இருந்திருந்தால் நிச்சியமாக அதனை வேண்டாம் என்று சொல்லிருப்பேன். கே.எல்.ராகுல் கடந்த சில மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை, ஆனால் ஆசிய கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ளார் ?”

“இந்திய அணியில் இதுவரை 8 அல்லது 9 கேப்டன்கள் உள்ளனர். ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, ஸ்ரேயாஸ் ஐயர் (ஐபிஎல்), ஜஸ்பிரிட் பும்ரா, ரோஹித் சர்மா, விராட்கோலி போன்ற வீரர்கள் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வந்துள்ளனர். அதில் சூரியகுமார் யாதவும் நிச்சியமாக கேப்டனாக இருக்க கூடிய வாய்ப்பு நெருங்கி வருகிறது.”

“அதனால் எனக்கு தெரிந்து கே.எல்.ராகுல் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஷிகர் தவான் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர். அதனால் ஷிகர் தவான் தான் கேப்டனாக இருக்க வேண்டும். கே.எல். ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடலாம்.
ஆனால் தவானை மாற்றியதில் எந்த பெரிய மாற்றமும் நடக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.”

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img