HomeTrending Newsநான் தோனியை போலவே இந்திய அணிக்கு சிறந்த பினிஷர் ஆக இருக்க வேண்டும் ; இளம்...

நான் தோனியை போலவே இந்திய அணிக்கு சிறந்த பினிஷர் ஆக இருக்க வேண்டும் ; இளம் வீரர் பேட்டி ; யார் தெரியுமா ?

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கிய போட்டியில் இதுவரை வெற்றிகரமாக 23 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் பல எதிர்பாராத விஷயங்கள் பல நடந்துள்ளது.

இதுவரை நடந்து முடிந்த போட்டியை வைத்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியும், மூன்றாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், நான்காவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் உள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த அணியான மும்பை மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் இந்த முறை புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. ஐபிஎல் போட்டி தொடங்கினால் போது ஒரு வீரரை பற்றி இன்னொரு பேசுவது, அவரவர் கருத்துக்களை பற்றி பேசுவது வழக்கம் தான்.

அதேபோல தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 20 வயதான ரியன் பராக் சம்பத்தில் அளித்த பேட்டியில் ; ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மட்டுமின்றி இந்திய அணியிலும் நான் சிறந்த பினிஷராக விளையாட ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதனை பற்றி மேலும் பேசிய பராக் ;

“நான் எப்பொழுதும் என்னை புகழ்ந்து பேசவே மாட்டேன். நான் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறேன். என்னுடைய ஆசை ஐபிஎல் போட்டிகளிலும் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியில் நான் சிறப்பாக விளையாடி பினிஷர் ஆக இருக்க வேண்டும்.”

“எனக்கு பேட்டிங்-கில் மட்டுமின்றி, பவுலிங், பீல்டிங் போன்ற அனைத்து விஷயங்களும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தான். இதனை செய்ய நான் கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. அதனை நான் தொடர்ந்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, நான் சையத் முஸ்தாக் அலி கோப்பையில் கேப்டனாக வழிநடத்தி விளையாடியுள்ளேன்.”

“நான் கேப்டனாக இல்லை என்றாலும், அது என்னுடைய போட்டியாக தான் நான் நினைப்பேன். ஒரு மாநிலத்திற்கு கேப்டனாக இருப்பது மிகவும் பெருமையான விஷயம் தான். இதற்கு உதாரணமாக தோனியை சொல்லவில்லை, ஆனால் தோனியை போல நான் இருக்க ஆசைப்படுகிறன்.”

அவரை போல நானும் எதற்கும் கோவப்படவே மாட்டேன் என்று கூறியுள்ளார் ரியன் பராக். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 25 ரன்களை அடித்துள்ளார். பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் திறமையான வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img