கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொடங்கியது இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடியது.


முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 574 ரன்களை அடித்துள்ளது இந்திய அணி. அதில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175, ரிஷாப் பண்ட் 96, ஹனுமா விஹாரி 58, விராட்கோலி 45, ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்-விளையாட தொடங்கியது.
அதில் இலங்கை அணி 4 விக்கெட்டை இழந்த நிலையில் 108 ரன்களை கைப்பற்றியுள்ளது. இப்பொழுது இலங்கை அணியின் வீரர்கள் நிஷங்க மற்றும் அசலாங்க போன்ற இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். என்ன செய்ய போகிறது இலங்கை அணி ?


நேற்று இரண்டாவது நாள் முடிந்த பிறகு இந்திய அணியின் ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் ; “நான் மிகவும் சந்தோஷமாக தான் இருக்கிறேன். நேற்று ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடினார். அவரது விளையாட்டை நான் பார்த்து ரசித்து கொண்டு வந்தேன்.”
“நானும் அவசரப்படாமல் , பொறுமையாக மிடில் ஒவரில் விளையாடினேன். நானும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் எப்படி செய்ய வேண்டும் என்பதை தான் பேசினோம். அதே விஷயத்தை தான் ரவிச்சந்திரன் அஸ்வின்-மும் கூறினேன். அதுவும் அஸ்வின் பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது.”


“ஒருவரால் அணியை வெற்றிபெற வைக்க முடியாது. டீம் ஒர்க் தான் மிகவும் முக்கியமான ஒன்று. இப்பொழுது நங்கள்எதிர் அணியின் விக்கெட்டை கைப்பற்றவதற்கு அனைத்து முயற்சிகளையும் கையில் எடுக்க உள்ளோம் என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா…!”
ரவீந்திர ஜடேஜா இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை அடித்துள்ளார். அதுவும் 175 ரன்களை அடித்த பின்னர் ஆட்டம் இழக்காமல் விளையாடி வந்தார்.