இந்திய அணியிடம் இதை தான் நான் எதிர்பார்க்கிறேன் ; அதனை செய்தே ஆக வேண்டும் ; கவாஸ்கர் பேட்டி ;

இன்றைய 28வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளனர். இதுவரை பல முறை முக்கியமான போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது நியூஸிலாந்து அணி. இந்த போட்டி இன்று இரவு 7:30 மணி அளவில் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது..!

இந்திய அணியில் பல மாற்றங்களுடன் தான் இன்றைய போட்டியில் விளையாட போவதாக கருத்துக்களை வெளியாகியுள்ளது. ஆனால் பல மாற்றத்தை நிச்சியமாக இந்திய அணியில் இருக்காது… ! ஏனென்றால் இது உலகக்கோப்பை போட்டிகள் அப்படி மாற்றம் செய்தால் இந்திய அணியில் பலவீனமாக கூட மாறும்…!

ஆனால் ஒரு சில மாற்றங்கள் நிச்சியமாக நாடாகும் என்பதில் சந்தேகமில்லை…! அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்வியால் பல கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்..! அதனால் இந்திய அணியின் வீரர்களை பற்றி சில தவறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் அளித்த பேட்டியில் ; இந்திய அணி மிகவும் திறமையான அணி என்பது உலகத்திற்கே தெறியும். ஆனால் நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன், இந்திய அணியின் திறமையை இந்த உலகத்திற்கு காமிக்க வேண்டும்…!

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி புள்ளிபட்டியலில் கீழே இருந்தது. ஆனால், இந்திய அணியால் கீழே இருந்து மேல் வருவது எப்படி என்பது நன்கு தெறியும், இந்திய அணி கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்…!

இன்றைய போட்டி நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான விளையாட்டு. ஏனென்றால் இந்த போட்டி முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான், நபியா மற்றும் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அதில் கூட இரு அணிகளும் (நியூஸிலாந்து, இந்திய) வெற்றிபெற்றால் தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒரே இடத்தில் இருக்கும்.

அதனால் இன்றைய போட்டி என்பது மிகவும் முக்கியமான போட்டி. அதனால் இரு அணிகளுக்கும் இடையே அதிரடியான ஆட்டத்தை நிச்சியமாக எதிர்பார்க்கலாம்..! நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமா ?? உங்கள் கருத்தை COMMENTS பண்ணுங்க….!