இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.


ஆசிய கோப்பை :
ஆசிய கோப்பையில் மொத்தம் 6 அணிகள் விளையாட உள்ளனர். அதில் இந்திய, பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற ஐந்து அணிகள் உறுதியான நிலையில் இன்னும் ஒரு அணி மட்டுமே தேர்வாகாமல் உள்ளது. அதில் சிங்கப்பூர், ஹாங் காங், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நான்கு அணிகளில் ஏதாவது ஒரு அணி மட்டுமே ஆசிய கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்தில் தான் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் இந்திய கிரிக்கெட் அணியின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்சத்தீப் சிங், அவேஷ் கான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இந்திய அணியின் தொடக்க வீரர் :
சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மட்டும் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டு வருகிறது இந்திய. ஆமாம் , இதுவரை இஷான் கிஷான், ரிஷாப் பண்ட், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தொடக்க வீரராக விளையாடியுள்ளனர்.
ஆமாம், ரோஹித் ஷர்மாவுடன் யார் தொடக்க வீரராக பார்ட்னெர்ஷிப் செய்ய போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது ? அதில் கடந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை முடிந்தவுடன் இஷான் கிஷான் தான் ரோஹித் ஷர்மாவுடன் பார்ட்னெர்ஷிப் செய்து வந்தார். ஆனால் அவ்வப்போது மட்டுமே போட்டிகளில் ரன்களை அடித்து வந்தார். அதனால் அவர் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு சரியாக இருக்க மாட்டார் என்று புரிந்த கொண்ட இந்திய அணி தொடக்க வீரரை மாற்றியுள்ளது.
அதுமட்டுமின்றி, இஷான் கிஷானுக்கு இப்பொழுது ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இருப்பினும் ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷான் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால் தொடக்க வீரராக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் துணை கேப்டன் ஷிகர் தவான் அணியில் இருக்கும்போது இஷான் கிஷானுக்கு எப்படி ப்ளேயிங் 11ல் இடம்கிடைக்கும் ?


இதனை பற்றி பேசிய இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷான் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து அணியின் தேர்வாளர்கள் எப்பொழுதும் சரியான முடிவுகளை தான் எடுப்பார்கள். ஒரு போட்டியில் வீரர்களை தேர்வு செய்யும்போது நிச்சியமாக பல யோசனை செய்வார்கள், ஏனென்றால் கொடுக்கும் வாய்ப்பு சரியாக இருக்க வேண்டுமென்று.”
“அதனால் நான் ஆசியா கோப்பையில் தேர்வாகவில்லை என்ற யோசிப்பதை விட இதனை பாசிட்டிவ் ஆக நினைத்து கொண்டு சிறப்பாக பயிற்சி செய்து ரன்களை அடிக்க வேண்டுமென்று தான் நான் நினைக்கிறன். தேர்வாளர்களுக்கு என்மேல் நம்பிக்கை எழும்போது நிச்சியமாக அவர்களே என்னை அணியில் தேர்வு செய்வார்கள் என்று கூறியுள்ளார் இஷான் கிஷான்.”