தோனி, விராட் மற்றும் ரோஹிட் இந்த மாதிரி பண்ணுவாங்க என்று நான் எதிர்பாக்கவில்லை… !!! சஞ்சு சாம்சன் அதிரடியான பேட்டி…!!

இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு விருந்தாக வரப்போகிறது ஐபிஎல் 2021. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற போவதால் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் என்றாலே அது இந்தியாவில் ஒரு திருவிழா போன்ற நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றிகரமாக 13ஆண்டுகள் முடிந்து இப்பொழுது 14வது ஆண்டு ஐபிஎல் போட்டியில் காலடியை வைத்துள்ளது ஐபிஎல். எல்ல வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர். ஏனென்றால் ஐபிஎல் போட்டியின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணியில் இணைய மிகப்பெரிய தலமாக விளங்குகிறது.

அது ஒருபக்கம் இருக்க , இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஐபிஎல் அணிகளை பற்றியும் வீரர்கள் பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இரு அணிகளில் புதிய இளம் கேப்டன் ஆகி உள்ளனர். அதில் ஒருவர் டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் தோள்பட்டையில் பலமான அடிப்பட்டதால் அவரால் ஐபிஎல் 2021 போட்டிகள் விளையாட முடியாது என்று டெல்லி கேப்பிடல்ஸ் அனி கூறினார். அதனால் அவருக்கு பதிலாக புதிதாக ரிஷாப் பண்ட் கேப்டனாக இருப்பர் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் கூறியுள்ளனர்.

அதன் வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் புதிதாக அறிமுகம் ஆகியுள்ளார். கடந்து ஆண்டு வரை ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் ஆக இருந்தார். ஆனால் இப்பொழுது அவரை அணியில் இருந்து விலகினார். அதனால் நீண்டகாலமாக அணியில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் ஆன பின்பு சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில் ; நான் நீண்ட ஆண்டுகளாக ராஜஸ்தான் அணியில் தான் விளையாடுகிறேன். ஆனால் இப்போது நான் கேப்டன் என்பது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஆனால் அதிக பெறுப்பும் என்னிடம் வந்துள்ளது. நான் கேப்டன் ஆன பிறகு எனக்கு தோனி பாய், விராட் கோலி பாய் மற்றும் ரோஹித் சர்மா பாய் எனக்கு வாழ்த்துக்கள் என்று தகவல் அனுப்பினார்.

நான் சத்தியமாக அதனை எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் இந்த மூன்று வீரர்களும் அவரவர் கடமைகளை இந்திய கிரிக்கெட் அணிக்காக செய்துள்ளனர். அவர்கள் வாழ்த்து செய்தியை சொல்லுவார்கள் என்று ஒரு துளி கூட நான் எதிர்பார்க்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார் சஞ்சு சாம்சன்.