தோனியிடம் இதை நான் கற்றுக்கொண்டேன்…சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ; ஓபன் டாக்…!

ஐபிஎல் 2021 ; வருகின்ற ஏப்ரல் 9ஆம் ஐபிஎல் தொடங்க உள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 முதல் சில போட்டிகளில் மக்கள் யாரையும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகளுள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. ஐபிஎல் ஆரம்பித்த அன்றுமுதல் இன்றுவரை மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக உள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் கடந்த ஆண்டு தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது. அதனால் ஒட்டுமொத்த டோனி ரசிகர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எல்லாருக்கும் வயதாகிவிட்டது என்று பலர் கிண்டல் செய்துவந்தனர். இனி சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று பலர் குறி வந்த நிலையில். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை சிஎஸ்கே அணி தான் முதலில் தொடங்கியுள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பித்த பயிற்சி இப்பொழுது மும்பை மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்குமா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

தோனியிடம் இதை நான் கற்றுக்கொண்டேன்…சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ; ஓபன் டாக்…!

சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் தோனியிடம் என்ன கற்றேன் ? என்பதை கூறியுள்ளார். கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை நல்லது கேட்டது என்பது இருக்கும். அதில் நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம். எந்த பிரச்சையாக இருந்தாலும் சமமாக அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதை தோனியிடம் கற்றுக்கொண்டேன்.

கடந்த ஆண்டு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனிங் பேட்டிங் செய்த ருதுராஜ், மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி 204 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அதிகபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும் போது 72 ரன்கள் எடுத்துள்ளார் ருதுராஜ். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் நிச்சியமாக சிஎஸ்கே அணிக்கு சிறந்த வீரராக இருப்பர் என்று எதிர்பார்க்க படுகிறது.

வருகின்ற ஐபிஎல் 2021யில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் முதல் போட்டி வருகின்ற 10ஆம் தேதி நடைபெற போகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.