ஆஸ்திரேலியா : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் குரூப் 2ல் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளனர். இன்று மதியம் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோத உள்ளன.

இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இனிவரும் போட்டிகளில் சிறப்பாக இந்திய கிரிக்கெட் அணி வென்றால் தான் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
அந்த போட்டி நிச்சியமாக எந்த கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்கவே முடியாத ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் முதல் 6 ஓவரில் முக்கியமான மூன்று விக்கெட்டை இழந்த இந்திய அணி மோசமான நிலையில் இருந்தனர். ஆனால் ஹர்டிக் பாண்டிய மற்றும் விராட்கோலியின் சிறந்த பார்ட்னெர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியது.

விராட்கோலியின் சிறந்த கம்பேக் :
இந்திய கிரிக்கெட் அணியில் விராட்கோலியின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்ற விராட்கோலி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியையும் வழிநடத்தி வந்தார்.
இருந்தாலும், கேப்டன் பதவிக்கு பிறகு விராட்கோலியின் பங்களிப்பு இந்திய அணியில் குறைந்து விட்டது. அதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட்கோலி. சுமார் 3ஆண்டுகள் சொல்லும் அளவிற்கு ரன்களை அடிக்காத விராட்கோலி சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தது சிறந்த கம்பேக் ஆக மாறியது.
ஆமாம், அதேபோல தான் ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டியிலும் சிறப்பாக விளையாடிய விராட்கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 82* ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்துள்ளார். இது இந்திய அணிக்கு பலமாகவும் மற்ற அணிகளுக்கு சவாலாகவும் மாறியுள்ளது தான் உண்மை.

இதனை பற்றி பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறுகையில் ; ” நான் விராட்கோலியை அதிகமாக நம்புகிறேன். அவர் (விராட்கோலி) நிச்சியமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதை போல எங்களுக்கு எதிராக விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கிறோம் கூறியுள்ளார் ஸ்காட் எட்வர்ட்ஸ்.”
இந்த ஆண்டு 2022 ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுமா ? இல்லையா ? ஏனென்றால் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை போட்டியிலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments