HomeTrending Newsபாகிஸ்தான் வீரரை பார்த்த உடன் முடிவு செய்துவிட்டேன் ; அதனால் தான் சிக்ஸர் அடித்தேன் ;...

பாகிஸ்தான் வீரரை பார்த்த உடன் முடிவு செய்துவிட்டேன் ; அதனால் தான் சிக்ஸர் அடித்தேன் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

போட்டி 2: துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இதுவரை இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பையில் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

அதில் அதிகபட்சமாக இந்திய கிரிக்கெட் அணி 8 முறையும், பாகிஸ்தான் அணி 5 முறையும் வென்றுள்ளனர். அதனை அடுத்து இன்றைய போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்தபடி இல்லையென்றாலும், பின்னர் போக போக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட தொடங்கினார்கள்.

இருப்பினும் தொடர்ந்து விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களை அடித்தனர். அதில் ரிஸ்வான் 43, நசீம் 0, டஹானி 16,ஹரிஸ் ரவூப் 13, ஷதாப் கான் 10, அஹமத் 28, பாபர் அசாம் 10 ரன்களை அடித்துள்ளனர். பின்பு பேட்டிங் செய்த இந்திய அணி 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினார்கள்.

தொடக்க வீரரான கே.எல்.ராகுல் எதிர்பார்க்காத வகையில் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் விராட்கோலி, ஜடேஜா, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதில் ரோஹித் சர்மா 12, விராட்கோலி 35, ரவீந்திர ஜடேஜா 35, சூரியகுமார் யாதவ் 18, ஹர்டிக் பாண்டிய 33 ரன்களை அடித்துள்ளனர். இறுதிவரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 148 ரன்களை அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.

அதனால் குரூப் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கியமான காரணம் ஹர்டிக் பாண்டிய தான். ஏனென்றால், பவுலிங்கில் மூன்று விக்கெட்டை கைப்பற்றியுள்ளார், அதே நேரத்தில் பேட்டிங் செய்தும் 33 ரன்களை விளாசியுள்ளார்.

அதனால் தான் இந்திய அணி வெல்ல முடிந்தது. போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் ; ” எனக்கு பவுலிங்கில் ஷாட் மற்றும் லென்த் பவுலிங் தான் என்னுடைய பலம். அதனை எப்படி உபயோகிக்கிறோம் என்பது தான் உண்மை. எப்பொழுதும் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது நிச்சியமாக ஒவ்வொரு ஒரு ஓவருக்கும் ரன்களை பார்த்து பார்த்து அடிக்க வேண்டும்.”

“அதுமட்டுமின்றி எனக்கு நன்கு தெரியும் ஒரு இளம் வீரரும், ஒரு சுழல் பந்து வீச்சாளரின் பவுலிங் தான் மீதமுள்ளது என்று. இறுதி ஒவரில் 7 ரன்கள் தான் தேவை என்ற நிலை இருந்த காரணத்தால் அதற்கு ஏற்ப விளையாடினேன். அதுமட்டுமின்றி எனக்கு நன்கு தெரியும், இறுதி ஓவரில் பாகிஸ்தான் பவுலர்களுக்கு பத்தற்றமாக தான் இருக்கும் என்று. அதுவும் என்னைவிட அவர்கள் பதற்றமாக இருந்ததால் எனக்கு அது சுலபமாக மாறியது” என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img