HomeTrending News2018ஆம் ஐபிஎல் இறுதி போட்டியில் தோனி எடுத்த அந்த முடிவை மறக்கவே முடியாது ; அது...

2018ஆம் ஐபிஎல் இறுதி போட்டியில் தோனி எடுத்த அந்த முடிவை மறக்கவே முடியாது ; அது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது….!!!

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது. அதற்கு முக்கியமான காரணம், லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ கூறியது. மிதமுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்க போகிறார்கள் என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, புதிய அணிகள் அதிகபட்சமாக மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியது.

அதில் இரு இந்திய வீரர்களும், ஒரு வெளிநாட்டு வீரர்களும் கைப்பற்றாலம் என்று கூறியது பிசிசிஐ. அதனால் ஏலத்தை எதிர்பார்த்து கத்துக்கொண்டு இருக்கின்ற. இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவது மகேந்திர சிங் தோனி தான் .

சமீபத்தில் தென்னாபிரிக்கா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான லுங்கி நெகிடி அளித்த பேட்டியில் ; 2018ஆம் ஆண்டு இறுதி போட்டியில் தோனி எடுத்த முடிவை பற்றி பேசியுள்ளார். தோனியை பற்றி கூறுகையில் ; 2018ஆம் ஆண்டு சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் விளையாடும் போது பீல்டிங் பற்றி பெரிய அளவில் எங்கள் அணிக்குள் பேசவில்லை.

ஆனால் திடிரென்று பீல்டிங் மாற்றப்பட்டு விக்கெட்டை கைப்பற்றினோம். அது எனக்கு ஆச்சரியமாக தான் உள்ளது. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சூப்பர் கின்ஸ் அணி பிளான் செய்து அதனை உபயோகப்படுத்தபட்டது. அந்த நிகழ்வு எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி நம்பிக்கையையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தோனி எப்பொழுதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கட்டுப்பாட்டுடன் தான் வைத்திருப்பார். அதுவும் பீல்டிங் செய்யும்போது எப்பொழுதும் அமைதியாக தான் அதனை செயல்படுத்துவார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் போது நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். அதிலும் பிளான், எப்படி யார் பவுலிங் செய்ய வேண்டும் என்று. அது நான் கிரிக்கெட் வீரராக வளர காரணமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் லுங்கி நெகிடி.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடி வருகிறார். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img