நான் இந்த அளவுக்கு பவுலிங் செய்வதற்கு இவர் தான் முக்கியமான காரணம் ; இந்திய அணியின் பவுலர் பும்ரா கூறியுள்ளார்..!

ஐபிஎல் 2021: கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக தொடங்கியது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் பாதி முடிந்த நிலையில் சில முக்கியமான வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் வேறு வழியில்லாமல் ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் பல பாதுகாப்பு விதிமுறையை பின்பற்றி ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் ஆரம்பித்தது. ஆனால் சில வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பதால் உடனடியாக போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

அதுமட்டுமின்றி வருகின்ற செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள போட்டிகள் தொடங்க உள்ளது. ஏனென்றால், அதற்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் இருப்பதால், செப்டம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

இதற்கிடையே சமீபத்தில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அளித்த பேட்டியில் ; அவருக்கு பிடித்த பந்து வீச்சாளர் பற்றி சில முக்கியமான கருத்தை கூறியுள்ளார். அதனை பற்றி பேசிய பும்ரா, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைக்க இவர் தான் முக்கிய கரணம் என்று கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் பயிற்சியாளரான ஷேன் பாண்ட் பார்த்து தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நான் வடிவமைத்து வருகிறேன். நான் எப்பொழுதும் அவரிடம் பேசுவேன். அது எனக்கு நல்ல அனுபவத்தை கற்றுக்கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது.

2015ஆம் ஆண்டு தான் முதல் முதலில் ஷேன் பாண்ட் பார்த்தேன். நான் குழந்தையாக இருக்கும்போது, ஷேன் பாண்ட் பவுலிங் எப்பொழுதும் நான் மிகவும் ரசிப்பேன். நான் எப்போ அவர்கிட்ட எனது அனுபத்தை பகிர்ந்தானோ, அவர் என்னுடைய பவுலிங் திறனை அதிக படுத்த உதவினார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.