என்னுடைய கனவு இதுதான் ; நான் கண்டிப்பாக செய்ய வேண்டும் ; பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கருத்து ..!

ஐபிஎல் ரசிகர்கள் எதிர்பார்த்த படி நாளை தொடங்க உள்ளது ஐபிஎல் 2021 போட்டி. அதனால் கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல் ரசிகர்களும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். முதல் போட்டி நாளை மாலை 7:30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் 2021 போட்டிகளில் சிறப்பான முறையில் ரசிகர்களின் ஆதரவை பெற்று நடைபெற்று வருகிறது. இதுவரை 13ஆண்டுகள் ஐபிஎல் சீசன் முடிந்துள்ளது. இந்நிலையில் இப்பொழுது 14வது அடியை எடுத்து வைக்கிறது ஐபிஎல்.

அணைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவரவர் அணியின் வீரர்களை பேட்டிகள் எடுத்து அவரவர் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 டெஸ்ட், 1 ஒருநாள், மற்றும் 3 டி-20 போட்டிகளில் இந்தியா அணிக்காக விளையாடியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நான் என்னுடைய கடமையை செய்து வருகிறேன். நான் பவுலிங் செய்யும்போது பும்ரா எப்பொழுதும் எனக்கு பின்னல் நின்று பல அறிவுரையை கூறுவார்.

பெங்களூர் அணிக்காக இதுவரை 35 போட்டிகளில் 39 விக்கெட்டை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தொடக்கத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான விக்கெட் எடுத்ததால் எனக்கு நம்பிக்கை வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான முறையில் பந்து வீசிய முகமது சிராஜ் பல விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். எனக்கு நான் என்னுடைய 100% சதவீதம் உழைப்பை இந்திய அணிக்காக கொடுக்க வேண்டும்.

என்னுடைய கனவு என்றால் அது இந்தியா வீரர்களில் அதிகமான விக்கெட் எடுத்தவர் நான் என்ற பெயர் வர வேண்டும் என்று கூறியுள்ளார் முகமது சிராஜ். அதுமட்டுமின்றி கடந்த ஐபிஎல் மற்றும் ஐபிஎல் 2021ல் குறுகிய வட்டத்துக்குள் விளையாடுவது மிகவும் கடினம்.ஆனால் இது வீரர்களை வலிமையாக்கும் ; சிராஜ் கூறியுள்ளார்.