இந்த மாதிரி எல்லாம் தோனியால் தான் இருக்க முடியும் ; சஞ்சு சாம்சன் அதிரடியாக கூறியுள்ளார்….!

14வது இந்தியன் பிரீமியர் லீக், வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு இருக்கின்றனர். அதனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு விறுவிறுப்பான போட்டிகளுக்கு பஞ்சம் இருக்காது.

இந்த ஆண்டும் ஐபிஎல் 2021, போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி எந்த அணிக்கும் அவரவர் ஹாம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது என்றும். முதல் சில போட்டிகளில் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் அனுமதி இல்லை என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

ஐபிஎல் வீரர்கள் அனைவரும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் இடையே அனைத்து அணிகளின் சமூகவலைத்தளங்களில் அவரவர் அணி வீரர்கள் பயிற்சி விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அனால் அவரை அணியில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக இளம் வீரர் சஞ்சு சாம்சன் கேப்டன் ஆனார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் டோனியை பற்றி பேசியுள்ளார்;

உலகத்தில் மிகவும் முக்கியமான மற்றும் அதிக வெற்றிகளை கைப்பற்றிய ஒரே கேப்டன் அது தோனி தான். அவரை போல இருக்க நான் ஆசை படுகிறேன், இருந்தாலும் அவரை போல யாருமே இருக்க முடியாது. சர்வதேச போட்டிகளில் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் அவர் ஒரு வெற்றி கேப்டன் தான் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.

எங்க அணிக்கு தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி, நான் தோற்றாலும், ஜெயித்தாலும் என்றும் எங்கள் முகத்தில் சிரிப்பை பார்க்க நினைக்கும் ரசிகர்கள் நன்றி என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன்.

ஐபிஏஎல் 2021 ஏலத்தில், அதிகபட்ச விலையில் தென்னாபிரிக்கா ஆல் – ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் போட்டி 12ஆம் தேதி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொள்ள போகிறது.