சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தலைமை தாங்கி இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.


இதில் ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்களை அணியில் வைத்து போட்டியில் விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்த போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய. இதனை தொடர்ந்து வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அணியை வழிநடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதில் விராட்கோலி இல்லாதது அதிர்ச்சியாக தான உள்ளது.
சமீப காலமாக விராட்கோலியின் பேட்டிங் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. 100 சதம் அடித்து உலக சாதனை செய்த சச்சின், அவரை நிச்சியமாக விராட்கோலி அந்த சாதனையை முறியடிப்பார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆமாம், விராட்கோலி இதுவரை மொத்தம் 70 சதம் அடித்துள்ளார்.


கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு போட்டியில் விராட்கோலி இறுதியாக சதம் அடித்துள்ளார். ஆனால் அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 3 வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் விராட்கோலி. இதற்கிடையில், அவருக்கு எதற்கு ஓய்வு ? என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் அணியில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் இந்திய அணியில் யாராவது சரியாக விளையாடவில்லை என்றால் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை போன்ற போட்டிகளில் பங்கேற்ற பிறகு இந்திய அணியில் விளையாட வைத்தனர். ஆனால் இப்பொழுது ஓய்வு வழங்கி வருகிறது பிசிசிஐ என்று முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.


விராட்கோலி-யின் மோசமான பேட்டிங் , இப்படி தொடர்ந்து இருந்தால் வருகின்ற ஆசிய உலகக்கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இருக்குமா ? என்பது சந்தேகம் தான். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்கள் உள்ளனர்.
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி மன்னன் விராட்கோலி தான் எதற்கு இன்னும் இந்திய அணியில் விளையாடி வருகிறார் என்பதை கூறியுள்ளார். அதில் ” என்னுடைய முக்கியமான நோக்கம் வருகின்ற ஆசிய கோப்பை மற்றும் டி-20 2022 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும், அது தான் என்னுடைய முதல் நோக்கம் என்று கூறியுள்ளார் விராட்கோலி.”
இந்த ஆண்டு ஆசிய கோப்பை அடுத்த மாதம் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு இந்திய மற்றும் ஜிம்மபவே அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் அதில் விராட்கோலி நிச்சியமாக அணியில் இடம்பெற்று விளையாட வேண்டுமென்று இந்திய அணியின் தேர்வாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.