இவரிடம் இருந்து தான் பினிஷிங் எப்படி செய்யவேண்டும் என்று கற்றுக்கொண்டேன் ; ஹர்டிக் பாண்டிய பேட்டி ;

0

ஆசியா கோப்பை 2022: நேற்று முன்தினம் நடந்த போட்டியை நிச்சியமாக இந்திய ரசிகர்களால் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. ஆமாம், ஏனென்றால் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி தீரில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் சுருக்கம் :

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இறுதிவரை போராடி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 147 ரன்களை அடித்தனர். பின்பு 148 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி.

இறுதி ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 19.4 ஓவர் முடிவில் 148 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. இதற்கு முக்கியான காரணம் ஹர்டிக் பாண்டிய தான். ஆமாம் விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் ஆட்டம் இழந்தாலும் இறுதிவரை விளையாடியது ஹர்டிக் பாண்டிய தான்.

பவுலிங்கில் 3 விக்கெட்டை கைப்பற்றிய ஹர்டிக் பாண்டிய பேட்டிங்-கில் பட்டைய கிளப்பியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, இறுதி வரை பேட்டிங் செய்து 33 ரன்களை அடித்துள்ளார் ஹர்டிக். அதிலும் இறுதி நேரத்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார் ஹர்டிக் பாண்டிய.

ஹர்டிக் பாண்டிய பேட்டி:

எப்பொழுது ஒரு போட்டியில் அதிக ரன்களை அடித்துவிட்டாலோ அல்லது விக்கெட்டை கைப்பற்றிவிட்டால் அவரை பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தும் அவர் (வீரர்) சொல்லும் கருத்தும் எப்பொழுதும் இணையத்தை கலக்கும். அதேபோல தான் ஹர்டிக் பாண்டிய சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளனர்.

அதில் ” நான் விளையாடிய அணிகளில் எனக்கு இந்திய கிரிக்கெட் அணி மட்டும் தான் மிகவும் பாதுகாப்பான அணியாக பார்க்கிறேன், அதுமட்டுமின்றி நான் இந்த அளவிற்கு விளையாட உதவியாக இருந்தது இந்திய அணியின் நிர்வாகம் (பிசிசிஐ) மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என்று கூறியுள்ளார் ஹர்டிக்.”

“மேலும் தோனியை பற்றி பேசிய ஹர்டிக் பாண்டிய ; ஆமாம், என்னுடைய எடுத்துக்காட்டு வீரர் தோனி தான். நான் எப்பொழுது அவர் இறுதியாக போட்டியில் எப்படி விளையாடுகிறார் என்பதை கவனித்து கொண்டே தான் இருப்பேன். அதனால் இப்பொழுது எனக்கு உதவியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.”

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகளில் ஹர்டிக் பாண்டிய சரியாக விளையாட காரணத்தால் இந்திய அணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தோனி சொன்ன காரணத்தால் ஹர்டிக் பாண்டியாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here