தோனியை அவுட் செய்தது கூட எனக்கு சந்தோஷமில்லை..! ஆனால் அவருக்கு கீழ் நான் விளையாட வேண்டும் ; இளம் பந்து வீச்சாளரின் கனவு ..!

0

இந்திய கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அதனால் நிறைய இளம் வீரர்களுக்கு அவருக்கு கீழ் ஒரு போட்டியில் ஆவது விளையாட வேண்டும் என்ற ஆர்வம் நிச்சியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல, ஐபிஎல் போட்டியின் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் , ஐபியில் 2021யின் இரண்டாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

அதில் பேட்டிங் செய்த டோனியின் விக்கெட்டை இரண்டாவது பந்தில் எடுத்தார் அவேஷ் கான். அதனை பற்றி பேசிய அவேஷ் கான். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, வருகின்ற ஐபிஎல் போட்டிகளில் தோனிக்கு கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் விளையாட வேண்டும் என்று ஆசையும் எனக்கு இருக்கிறது.

அதேபோல, கடந்த 2018ஆம் ஆண்டு எனக்கு தோனி விக்கெட்டை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதனை கொலின் முன்னரோ அதனை தவற விட்டார். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளேன்.

அதன்பிறகு விராட்கோலி என்னிடம் பேசினார். அதில் நான் தெளிவாக இருப்பதாகவும், என்னுடைய பந்து வீச்சின் வேகம் சரியாக இருப்பதாகவும் கூறினார் விராட்கோலி. விராட்கோலிக்கு மட்டுமின்றி அதிரடி மன்னன் ஆன ஏ.பி.டிவில்லியர்ஸ் -க்கு பவுலிங் செய்தேன் என்று கூறியுள்ளார் இளம் வீரரான அவேஷ் கான்.

ஆனால் எனக்கு ஒரு துளி கூட மன அழுத்தம் இல்லவே இல்லை.நான் என்ன நினைத்தேனோ அதனை தான் செய்தேன். ஐபிஎல் 2021, இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 14 விக்கெட்டை எடுத்து அதிக விக்கெட் எடுத்துள்ள வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் அவேஷ் கான்.

அதுமட்டுமின்றி, வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் விளையாட உள்ளார். என்னுடைய ஒரே நோக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி விக்கெட்டை கைப்பற்ற வேண்டும். என்னுடைய முழு திறமையும் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் அவேஷ் கான்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here