இந்தியாவில் , ஐபிஎல் 2021 வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து பயிற்சி செய்து வருகின்றன்னர். கொரோனா காரணமாக முதல் சில போட்டிகளில் மக்கள் யாரும் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கு பிடித்த இந்திய வீர்ரகள் பற்றி பேசியுள்ளார். அப்போது பேசிய கங்குலி , நான் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை விரும்பி பார்ப்பேன்.
எனக்கு எல்ல இந்திய வீரர்களையும் பிடிக்கும். ஆனால் இளம் வீரர்களில் ரிஷாப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை விரும்பி பார்ப்பேன். பவுலிங்கில் பும்ரா , ஷாமி ,மற்றும் சமீபத்தில் பவுலிங்கில் என்னை ஈர்த்த தாகூரின் ஆட்டத்தையும் விரும்பி பார்ப்பேன் என்று கூறியுள்ளார் கங்குலி.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சுனில் கவாஸ்கர் போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வென்றுள்ளனர். அவருக்கு அடுத்த படியாக யார் என்று பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த இடத்தில் சச்சின் மற்றும்செவாகி வந்தனர். அவர்களுக்கு பிறகு இப்பொழுது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா வீரர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலைமை நிச்சியமாக மாறும், அப்படி பார்த்தால் ரிஷாப் பண்ட் மற்றும் கே.எல். ராகுல் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கங்குலி கூறியுள்ளார். இந்திய அணியில் எல்ல போட்டிகளில் விளையாடும் போது தான் பல வீரர்களின் திறமை தெரிகிறது.