விராட் கோலி கிட்ட பேசவே பயமாக இருக்கிறது ; டிவில்லியர்ஸ் அதிரடி பேட்டி , முழு விவரம் இதோ..!

ஐபிஎல் 2021; கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்து நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் பிசிசிஐ-யின் அதிரடி முடிவால் அனைத்து போட்டிகளையும் தற்காலிகமாக ரத்து செய்தது.

என்ப போட்டிகளை ரத்து செய்தனர்?

மே 4ஆம் தேதி அன்று நடைபெற வேண்டிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் பிசிசிஐ அறிவுரை படி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த இருவருக்கு தோற்று இருப்பது உறுதியானது.

அதனால் அனைத்து வீரர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று வீரருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவருக்கும், சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் பிசிசிஐ வேறு வழியில்லாமல் உடனடியாக போட்டிகளை ரத்து செய்து, அணைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

விராட் கோலி இந்த மாதிரி பண்ணுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை ; ஓப்பனாக பேசியுள்ளார் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டி- வில்லியர்ஸ் பேசியுள்ளார்;

விராட் கோலி மற்றும் டி-வில்லியர்ஸ் ஆகிய இருவரும் மிகவும் சிறப்பான நம்பர்கள் என்று உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று. சர்வதேச பொடியாக இருந்தாலும் இவர் இருவருக்குள் மிகச்சிறந்த புரிதல் இருக்கும், அதேபோல தான் ஐபிஎல் போட்டியிலும்.

ஐபிஎல் போட்டியில், பெங்களூர் அணியில் இணைந்து விளையாடி வருகின்றனர். இதனை பற்றி பேசிய டி-வில்லியர்ஸ் சில விறுவிறுப்பான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் விராட் கோலி மிகச்சிறந்த கேப்டன் மட்டுமின்றி நல்ல ஒரு நண்பர். நான் ஒரு நாள் அவர் அணிந்து இருந்த ஷூ பார்க்க நன்றாக இருந்தது.

அதில் பார்க்க நல்ல இருக்கு என்று சொன்னேன், அடுத்த நாள் எனக்கு அதேபோல ஒரு ஷூ எனக்கு பரிசளித்தார். எனக்கு காபி என்றால் மிகவும் மிகவும் பிடிக்கும், நான் விரும்பி குடிப்பேன். அதனை தெரிந்து கொண்ட விராட் கோலி, எனக்கு உடனடியாக காபி செய்யும் மிஷின் வாங்கி கொடுத்தார்.

இதனால் தான் எனக்கு இப்போ எல்லாம் அவரிடம் பேசவே பயமாக இருக்கிறது. நான் பார்த்து பார்த்து பொறுமையாக தான் பேச வேண்டியுள்ளது என்று விராட் கோலியின் அன்பான நட்பை பற்றி நெகிழ்ச்சியில் பேசியுள்ளார் அதிரடி வீரரான டி-வில்லியர்ஸ்.