நான் WTC இறுதி போட்டியில் இல்லாதது வருத்தமாக இருக்கிறது ; சூழல் பந்து வீச்சாளர்…! அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!

WTC 2021: வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளன.

சமீபத்தில் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் விராட்கோலி , ரோஹித் சர்மா , சுமன் கில், பும்ரா, முகம்மது ஷாமி , முகம்மது சிராஜ், ரவி சந்திரா அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ரிஷாப் பான்ட், தாகூர் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற உள்ளனர். ஆனால் அதில் குல்தீப் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டிய ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். இதற்கிடையே குல்தீப் யாதவ் இந்திய அணியில் இல்லாத காரணத்தால் அவரது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

அதில் ” நான் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது. நான் விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்குறேன். அணியில் இல்லாதது எல்லாம் நடக்குறது தான், ஆனால் அதே சமையம் அடுத்த வாய்ப்புக்காக நான் மிகவும் காத்துகொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.

நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை, இருந்தாலும் நான் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நிச்சியமாக இருப்பேன் என்று நம்புகிறேன். அப்படி வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.

எல்ல வீரர்களும், அனைத்து போட்டிகளிலும் இருக்கணும் என்று நினைப்பது சாதாரணம் தான். ஒருவேளை அணியில் இல்லை என்றால் மிகவும் வருத்தமாக தான் இருக்கும். எல்ல கிரிக்கெட் வீரர்களும் இதனை கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.