இவரை பார்த்து நான் பேட்டிங் செய்வதை காத்துக்கொள்ள வேண்டும் ; ஷிகர் தவான் சொன்ன அந்த வீரர் யார் தெரியுமா ?

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகள் தொடங்கியுள்ளது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. அதனால் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

இந்திய அணியின் வீரர் விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற முக்கியமான வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி விளையாட உள்ளனர். அதனால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ” பி ” பிரிவு விளையாடி வருகின்றனர்.

இதில் கேப்டனாக ஷிகர் தவான் தலைமை தாங்கி வருகிறார். அதிலும் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் உள்ளார். முதல் போட்டியில் அதிக விக்கெட்டை இழக்காமல் இந்திய அணி 36.4 ஓவர் முடிவில் வெற்றிபெற்றது.

ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. முதல் முக்கியமான பேட்ஸ்மேன் அனைவரும் விக்கெட்டை இழந்த நிலையில் இந்திய அணிக்கு தோல்வி தான் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் பவுலர் தீபக் சாகர் , அதிரடியான பேட்ஸ்மேன் ஆக உருமாறி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

எப்பொழுது அவ்வவ்போது கிரிக்கெட் வீரர்கள் மற்ற வீரர்களை பற்றி கருத்து சொல்லுவது வழக்கம். அதேபோல, இப்பொழுது இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக உள்ள ஷிகர் தவான் ஒரு வீரரை பற்றி சில கருத்துக்கள் கூறியுள்ளார்.

அதில் சூரியகுமார் எப்பொழுது பேட்டிங் செய்ய வந்தாலும், அவர் எந்த விதமான டென்ஷன் இல்லாமல் பேட்டிங் செய்வார். எனக்கு தெரிஞ்சு அதனை நான் சூரியகுமார் யாதவ் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான். இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார் சூரியகுமார் யாதவ்.

முதல் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 31 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 44 பந்தில் 53 ரன்களை விளாசியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் சூரியகுமார் யாதவ்.