சச்சின் மற்றும் கோலியை ஒரு முறையும் மற்றும் தோனியை இருமுறை அவுட் செய்துவிட்டேன் ; அடுத்தது ஏ.பி.டிவில்லியர்ஸ் தான் என்னுடைய அடுத்த இலக்கு… ! இளம் பந்து வீச்சாளர் பேட்டி

பல இளம் வீரர்களின் கனவை நினைவக்கியுள்ளது ஐபிஎல் லீக் போட்டிகள் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆரம்பித்து நடைபெற்று வந்தது. அதேபோல, ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இளம் வீரர்களுடன் பேசும் வாய்ப்பு அதிகம் இருக்கும் அதனால் இளம் வீரர்களின் திறமையை அதிக படுத்தி கொள்ள முடியும். அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 17 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். கடந்த 2019 – 2020 ஆண்டுகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடியுள்ளார். அதன்பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் , 2011ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, மகேந்திர சிங் தோனி விக்கெட்டை ஒருமுறையும் மற்றும் விராட் கோலி விக்கெட்டை ஒரு முறையும் கைப்பற்றியுள்ளேன். இது எல்லாம் என்னுடைய கனவு என்று கூறியுள்ளார் ஹர்ஷல் பட்டேல். அதேபோல், நிச்சியமாக நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து வெளியேற மாட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஹர்ஷல் பட்டேல்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2021, போட்டிகளில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று 3வது இடத்தில் உள்ளது பெங்களூர் அணி. அதற்கு முக்கியமான காரணம் ஹர்ஷல் பட்டேல் என்பதில் சந்தேகமில்லை. எப்பொழுதும் நான் விக்கெட்டை எடுக்கும்போது அதனை நான் கொண்டாட மாட்டேன். எனக்கு பதிலாக அதனை விராட் கோலி பார்த்து கொள்வார்.

எப்பொழுதும் பீல்டிங் செய்யும்போது அனைத்து வீரர்களையும் குஷி படுத்திக்கொண்டே இருப்பார் விராட் கோலி. நான் மும்பை இந்தின்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான் வீசிய முதல் பந்து No-Ball ,அப்பொழுது விராட் கோலி என்னிடம் வந்து ” சரியாக லேந்த் பந்தை வீச சொன்னார்” என்று பல தகவலை கூறியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல்.