நான் இந்த காரணத்துக்காக ஒரு போட்டியிலும் பேட்டிங் செய்தது இல்லை, அதனை செய்யவும் மாட்டேன் ; விராட் கோலி

IND Vs ENG 2021: நேற்று நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் தவானுக்கும் , முதல் ஒரு நாள் போட்டி போல் பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.

நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 336 ரன்களை எடுத்தனர். அதில் ரோஹித் சர்மா 25 ரன்கள், தவான் 4 ரன்கள், விராட் கோலி 66 ரன்கள்,கே.எல்.ராகுல் 108 ரன்கள், ரிஷாப் பண்ட் 77 ரன்கள்,ஹார்டிக் பாண்டிய 35 ரன்கள், குர்னல் பாண்டிய 12 ரன்கள் எடுத்துள்ளனர்.

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் ஒபெநிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 55 ரன்கள், மற்றும் பரிஸ்டோவ் 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இருந்தாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மலன் நல்ல பார்ட்னெர்ஷிப் செய்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்துள்ளனர். 43.3 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 337 ரன்களை எடுத்து இந்தியாவை வீழ்த்தியது.

Read More: ஐபிஎல் 2021; ஆர்.சி.பி அணியில் இவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தால் அதிரடியான ஆட்டம் இருக்கும் ; மைக்கல் வாகன் கருது….யார் அந்த வீரர்?

அதனால் இப்பொழுது இங்கிலாந்து மற்றும் இந்திய அணி ஆகிய இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்றுள்ளதால், 1 – 1 வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற போகின்ற இறுதி ஒருநாள் போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களே தொடரை கைப்பற்ற முடியும்..!

நான் இந்த காரணத்துக்காக ஒரு போட்டியிலும் பேட்டிங் செய்தது இல்லை, அதனை செய்யவும் மாட்டேன் ; விராட் கோலி

போட்டிக்கு பின்பு விராட் கோலியிடம் , நீங்கள் சதம் அடிக்கத்தான் விளையாடுறீங்களா என்று கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது ; அதற்கு சிரித்து கொண்டே பதிலளித்த விராட் கோலி அப்படி எல்லாம் ஒன்று இல்லாமல், நான் ஒரு போதும் சதம் அடிக்க போட்டியில் விளையாடுவதே கிடையாது, அதனை நான் ஒரு போதும் செய்யவும் மாட்டேன். என்னைப் பொறுத்தவரை அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

இறுதி ஒருநாள் போட்டியில் நிச்சியமாக வெற்றிபெற்றே ஆகா வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் அந்த கடமையை நிச்சியமாக சரியாக செய்வேன் என்று நினைக்குறேன் ; இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.