இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, அவரது முதல் சர்வதேச போட்டியாக 2004ஆம் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் பல தோல்விகள் மட்டுமின்றி பல அவமானங்களை எதிர்கொண்டுள்ளார் தோனி. .
2007ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டன் ஆக பெறுப்புப்பெற்று அணைத்து ஐசிசி கோப்பையையும் கைப்பற்ற இந்திய அணியை சிறந்த வழியை நடத்தியுள்ளார் தோனி என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி தோனி பல வீரர்களுக்கு பயிற்சி மற்றும் பல அறிவுரையை கொடுப்பார்.
தோனி போன்ற ஒரு கேப்டன் நிச்சியமாக இந்திய அணிக்கு இனிமேல் கிடைப்பது மிகவும் கடினம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியுள்ளார். தோனி ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி பெஸ்ட் விக்கெட் கீப்பர். அதுவும் சூழல் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது ஸ்டம்ப் பின்னல் நின்று கொண்டு மின்னல் வேகத்தில் பல விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
அதனால் சூழல் பந்து வீச்சாளர்களிடம் தோனிக்கும் நல்ல ஒரு புரிதல் இருந்துள்ளது. ஆனால் இப்பொழுது தோனியின் அசத்தலான விக்கெட் கீப்பர் இல்லாததால் பல சூழல் பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் வாழ்கை கேள்வி குறியாகியுள்ளது. அதில் முதல் இடத்தில் உள்ளார் குல்தீப் யாதவ்..!
தோனி சர்வதேச ஓய்வுக்கு பிறகு குல்தீப் யாதவ் மட்டுமின்றி சஹால் போன்ற வீரர்களுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் இந்திய அணியில் அவ்வப்போது மட்டும் தான் இடம் கிடைத்து வருகிறது. ஏனென்றால் தோனி விக்கெட் கீப்பர் ஆக இருந்த போது, மிகச்சிறப்பான முறையில் ஸ்டும்ப்பிங் செய்துள்ளார்.
ஆனால் இப்பொழுது இருக்கும் வீரர்கள் யாரும் தோனி அளவுக்கு ஸ்டும்ப்பிங் செய்வதில்லை. சமீபத்தில் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில் ; நான் தோனியை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் ஸ்டம்ப் பின்னால் இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி அவரது அனுபவத்தை நான் மிஸ் செய்கிறேன் என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.
தோனி இந்திய அணியில் இருக்கும்போது, நானும் (குல்தீப் மற்றும் சஹால் )ஆகிய இருவரும் இந்திய அணியில் இருந்தோம். ஆனால் அவரது ஓய்வுக்கு பிறகு நானும் சஹாலும் இணைந்து ஒரு போட்டியில் கூட விளையாடுவதில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார் குல்தீப் யாதவ்..!
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்று இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் வெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே குல்தீப் – க்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து குல்தீப் யாதவை நீக்கியுள்ளது பிசிசிஐ என்பது குறிப்பிடத்தக்கது.