இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி இப்பொழுது விராட்கோலி செய்த தவறை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த சில ஆண்டுகளாக இருந்துள்ளார் ரவி சாஸ்திரி. அவரை தொடர்ந்து இப்பொழுது ராகுல் டிராவிட் அந்த பொறுப்பை கையில் எடுத்துள்ளார். இப்பொழுது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை இரு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, விராட்கோலியை பற்றி பேசியுள்ளார்.


அவரை பற்றி கூறுகையில் : எனக்கு இன்னும் நல்ல நியாபகம் உள்ளது. சரியாக 2017ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை நடந்து கொண்டு இருந்தபோது தான். அந்த நேரத்தில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான முரளி விஜய்க்கு அடிபட்டுவிட்டது. அதனால் அவருக்கு (முரளி விஜய்)க்கு பதிலாக யார் என்ற கேள்வி எழுந்தது.
அப்பொழுது அணி தேர்வு செய்வதிலும் சிறப்பாக தான் அமைந்தது. நான் விராட்கோலி-யிடம் சென்று சொன்னேன், ஷிகர் தவான் என்று ஆனால் அதற்கு விராட்கோலி மறுப்பு தெரிவித்துவிட்டார். அவருக்கு பதிலாக அதிக ரன்களை அடிக்க குடைய வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று விராட்கோலி கூறினார்.


பின்னர் இந்திய அணியின் ப்ளேயிங் 11 ல் இடம்பெற்ற ஷிகர் தவான் முதல் நாளில் 168 பந்தில் 190 ரன்களை அடித்தார் தவான். அதில் 31 பவுண்டரிகள் அடங்கும். அதில் இந்திய அணி இலங்கை அணியை 304 வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.
அதில் இலங்கை அணியால் இந்திய அணியை நெருங்கி கூட வரமுடியவில்லை. அது இந்திய அணிக்கு மறக்கமுடியாத டெஸ்ட் போட்டியாகும். விராட்கோலி வேண்டாம் என்று சொன்னார், அதற்கு நான், இல்லை இவர் (ஷிகர் தவான்) மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். நிச்சியமாக அதிக ரன்களை அடிப்பார்.
நிச்சியமாக போட்டியை கூட வென்றுவிடுவார். முதல் போட்டியில் பிரேக் வரை 190 ரன்களை அடித்துள்ளார் தவான் என்று பெருமையாக கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி.