கே.எல்.ராகுல் இல்லை ; ஆசிய கோப்பைக்கான தொடக்க வீரர் இவர்கள் தான் ; மாற்றம் இருக்காது ; முன்னாள் வீரர் உறுதி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பைக்கான போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது .

ஆசிய கோப்பை 2022:

இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான டி-20 போட்டிகளில் மொத்தம் ஆறு அணிகளை கொண்டு நடைபெற உள்ளது. அதில் இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற ஐந்து அணிகள் உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஆறாவது அணியில் இடம்பெற நான்கு அணிகளும் கடும் போட்டியில் உள்ளனர்.

ஆமாம், சிங்கப்பூர், ஹாங் காங், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் ஒரு அணி மட்டும் தான் ஆசிய கோப்பையில் ஆறாவது அணியாக இடம்பெற உள்ளனர்.

ஆசிய கோப்பைக்கான இந்தியா அணியின் விவரம் :

சில தினங்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பையில் இடம்பெற போகின்ற 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் இருக்கும் பிரச்சனை:

கடந்த சில மாதங்களாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் காம்போவில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி தொடர்களை கைப்பற்றி வருகின்றனர். ஆனால் இந்திய அணியில் இருக்கும் ஒரே பிரச்சனை தொடக்க வீரர்கள் யார் என்பது தான் ? ஆமாம், ரோஹித் ஷர்மாவுடன் யார் களமிறங்க போகிறார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

கடந்த 12 டி-20 போட்டிகளில் இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அணியில் தொடக்க வீரராக விளையாடி வந்துள்ளனர். ஆனால் யார் ஆசிய கோப்பையில் களமிறங்க போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல் கூறுகையில் ; ” ஒரு போட்டியில் மட்டும் ரிஷாப் பண்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது சரியாக இல்லை. எனக்கு தெரிந்து விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தான் ஆசிய கோப்பை 2022யில் தொடக்க வீரராக களமிறங்க போகின்றனர் எனக்கு அப்படி தான் தெரிகிறது என்று பார்திவ் பட்டேல் கூறியுள்ளார்.”

கடந்த ஆண்டு உலகக்கோப்பை 2021 போட்டிக்கு முன்பு ரோஹித் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்து வந்துள்ளனர். ஆனால் இப்பொழுது விராட்கோலி கடந்த 6 போட்டிகளில் 20 ரன்களுக்கு மேல் அடிக்க முடியாமல் திணறி கொண்டு வருகிறார் விராட்கோலி.

ரோஹித் ஷர்மாவுடன் யார் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்தால் சிறப்பாக இருக்கும் ? விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா (அல்லது) கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆ ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here