முன்னாள் வீரரான தோனியும் தான் விளையாடாத கேப்டன் ; ரோஹித் ஷர்மாவிற்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த முறை ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்று கோப்பையை கைப்பற்றிவிடும் எதிர்பார்த்து கொண்டு இருந்த அனைவருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கிய ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டி, இறுதி தினங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்துள்ளது. அதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. ஆனால் செமி-பைனல் போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அதனால் இந்திய அணியின் தோல்விக்கு ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரின் தொடக்க ஆட்டம், புவனேஸ்வர் குமார், அஸ்வின், ஷமி போன்ற பவுலர்கள் பங்களிப்பு இல்லாதது தான் முக்கியமான காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரோஹித் சர்மாவின் பங்களிப்பு மிகவும் குறைந்துவிட்டது தான் உண்மை. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு பெரிதாக இல்லை.

முன்னாள் கேப்டன் தோனி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனை மகேந்திர சிங் தோனி, தலைமையிலான இந்திய அணி இறுதியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் மட்டும் தான் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. எப்பொழுதும் தோனியின் பங்களிப்பு நிச்சியமாக இந்திய அணி வெற்றிபெற்றதில் இருக்கிறது தான் உண்மை. ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி, அதே சமையத்தில் ஒரு பினிஷராக ரன்களை விளாசியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோசமான நிலையில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியதால் தோனியின் சாதனை பெரும்பொருளாக மாறியுள்ளது தான் உண்மை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான அதுல் வாசன் கூறுகையில் ; ” இதில் இரண்டு விதமான விளையாட்டு உள்ளது. அதனால் தோல்விக்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷி தான் காரணம் என்று சொல்ல முடியாது. அதில் அணியின் நிர்வாகமும் தான் இருக்கிறது. ஒரு முடிவுகள் கூட ரோஹித் சர்மா எடுத்ததாக இருக்காது.”

“எப்படி பீல்டிங் செய்யவேண்டுமென்று ரோஹித் சர்மா தான் முடிவு செய்வார். எனக்கு தெரிந்து (Non – Captain ) ரோஹித் சர்மா பேட்டிங் பெரிய அளவில் செய்யாமல், பீல்டிங்-ல் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வந்தார். இதை தான் தோனியும் போட்டிகளில் விளையாடும் பொது செய்து வந்துள்ளார் என்று கூறியுள்ளார் அதுல் வாசம். ரோஹித் சர்மா அணியின் தொடக்க வீரர், ஆனால் தோனி 7வது இடத்தில் பேட்டிங் செய்யும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, ஒரு தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இந்த ஆண்டு உலகக்கோப்பை 2022 போட்டியில் 4, 15, 2, 15, 27 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஒரு தொடக்க வீரராக இப்படி குறைவான ரன்களை அடித்தால் இந்தியா அணிக்கு எப்படி வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இந்த கிரிக்கெட் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்ன ?..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here