கடந்த பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியை அற்புதமாக வழிநடத்தி வருகின்றனர். அதில் கங்குலி அதன்பிறகு தோனி , அதன்பிறகு விராட்கோலி ,பின்னர் இப்பொழுது ரோஹித் சர்மா என்று பல வீரர்கள் இந்திய அணியை வழிநடத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக தோனி தலைமையிலான இந்திய அணி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.


தோனி விட்டு வைத்த டெஸ்ட் போட்டியை அற்புதமாக வழிநடத்தி கொண்டு சென்றார் விராட்கோலி. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு விராட்கோலி தான் இந்திய அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் விராட்கோலி என்பது தான் உண்மை.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை முன்னேறியது விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அதில் இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிகொண்டு தோல்வியை சந்தித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.


பின்னர் விராட்கோலி வேலைப்பளு அதிகமாக இருக்கும் காரணத்தால் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் பல முடிவுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி-யை வெளியேற்றியது பிசிசிஐ…!
பின்னர் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டும் இருந்தார் விராட்கோலி. ஆனால் அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்பது தான் உண்மை. சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு கேப்டன் பத்தியில் இருந்து விலகியுள்ளார் விராட்கோலி. இப்பொழுது ஒரு ப்ளேயாராக களமிறங்கி விளையாடி வருகிறார் விராட்கோலி.


இப்பொழுது இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணி 574 ரன்களை அடித்துள்ளார். அதில் 45 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனை பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் “கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரன்களை அடித்து தொம்சம் செய்தார் விராட்கோலி. பின்னர் அரை சதம் அல்லது 70, 80 ரன்களை தொடர்ந்து அடித்து கொண்டு வந்துள்ளார் விராட்கோலி. ஆனால் சதம் அடிக்க தவறிக்கொண்டே வருகிறார்.அதனால் விராட்கோலி இனி அவ்வளவு தான் என்று கணக்கு போட்டுவிட முடியாது.”


“இப்பொழுது ஒரு பந்து வருகிறது என்றால் அதனை எதிர்கொண்டு விளையாட வேண்டும். ஆனால் விராட்கோலி அதற்கு மாறாக விளையாடி வருகிறார். ஒருசில நேரங்களில் பேட் நுனியில் பட்ட பந்து ஸ்டம்ப்-ல் படுகிறது. அது அவரது நேரத்தை பொறுத்தான் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர்.”