பும்ராவுக்கு பதிலாக இவரை தான் துணை கேப்டனாக பிசிசிஐ நியமனம் செய்யும் என்று நினைத்தேன் ; ஆனால் எப்படி இவரை மிஸ் பண்ணாங்க ? முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் பேட்டி ; யார் அந்த வீரர் ?

0

இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. தொடரை கைப்பற்றுமா ??

இதனை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தென்னாபிரிக்கா அணியும் முன்று ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். இதனடிப்படையில், ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவித்த பிறகு அவரது கையில் அடிபட்ட காரணத்தால் டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றியது பிசிசிஐ.

ஒருநாள் போட்டியில் ஆவது விளையாடுவார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியிலும் விளையாட போவதில்லை என்று உறுதியாக பிசிசிஐ கூறியுள்ளது. பின்னர் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக கே.எல்.ராகுலை கேப்டனாக அறிவித்துள்ளது பிசிசிஐ. பின்னர் துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் அணியின் தேர்வாளரான சபா கரீம் அளித்த பேட்டியில் ; சத்தியமாக நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, துணை கேப்டனாக பும்ராவை அறிவிப்பார்கள் என்று. நான் விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் தான் துணை கேப்டனாக இருப்பர் என்று எதிர்பார்த்தேன்.

ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி மூன்று விதமான (ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட்) போட்டிகளிலும் விளையாடி வருகிறார் என்று கூறியுள்ளார் சபா கரீம்..!! சமீபத்தில் தான் கேப்டன் பற்றி சர்ச்சை முடிந்த நிலையில், விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாகவும், ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டனாவும் பொறுபெற்றுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here