பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்க போகும் வீரர் இவர் தான் ; ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த வீரர் தான் ;

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் போட்டிகள் நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

டி-20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை அனைத்து உலக கிரிக்கெட் அணிகளும் அறிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி காத்திருப்பு பட்டியலில் முகமத் ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷானி மற்றும் தீபக் சஹார் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பும்ரா தீடிர் விலகல்:

இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் தான் பும்ரா. இவரது பங்களிப்பு நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவையான ஒன்று. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டிக்கான தொடரில் இவர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக தான் இருந்தது.

உலகக்கோப்பை போட்டியில் நிச்சியமாக பங்கேற்பார் என்று பிசிசிஐ கூறியதால் கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் நேற்று பயிற்சி செய்துகொண்டு இருந்த நேரத்தில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரால் இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியாது என்று பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது.

பும்ராவிற்கு பதிலாக களமிறங்க போகும் மாற்று வீரர் யார் ?

நேற்று நடந்த தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் பும்ராவிற்கு பதிலாக தீபக் சஹார் தான் களமிறங்கி பவுலிங் செய்தார். யாருமே எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக பவுலிங் செய்து முக்கியமான விக்கெட்டையும் கைப்பற்றினார்.

அதில் 4 ஓவர் பவுலிங் செய்து 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். அதனால் நிச்சியமாக தீபக் சஹார் தான் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் இப்பொழுது தீபக் சஹார் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here