HomeTrending Newsஇதுதான் போட்டியின் மாற்றத்திற்கு முக்கியமான காரணம் ; இல்லையென்றால் நாங்க தான் வெற்றி பெற்றிருப்போம் ;...

இதுதான் போட்டியின் மாற்றத்திற்கு முக்கியமான காரணம் ; இல்லையென்றால் நாங்க தான் வெற்றி பெற்றிருப்போம் ; நிக்கோலஸ் பூரான் ஓபன் டாக்

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற வாஷ் அவுட் செய்த நிலையில் இப்பொழுது டி-20 போட்டியிலும் 3 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய.

நேற்று நடந்த நான்காவது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டத்தில் இருந்து இறுதி வரை அனைவரும் முடிந்த வரை ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்தனர்.

இந்திய வீரர்களின் ரன்கள் விவரம்:

ரோஹித் சர்மா 33, சூரியகுமார் யாதவ் 24, தீபக் ஹூடா 21, சஞ்சு சாம்சன் 30*, தினேஷ் கார்த்திக் 6, ரிஷாப் பண்ட் 44, அக்சர் பட்டேல் 20 ரன்களை அடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் இலக்கு மற்றும் பேட்டிங் :

192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை என்றாலும் மிடில் ஆர்டரில் கேப்டன் நிக்கோலஸ் பூரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அதனால் 19.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 132 ரன்களை மட்டுமே அடித்தனர். அதிலும் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 24, போவெல் 24, ஹெட்மயேர் 19, ஜேசன் ஹோல்டர் 13 ரன்களையும் அடித்துள்ளார். அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி.

போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் கூறுகையில் ; ” அவங்க (இந்திய) ரன்களை அடிக்க ஆரம்பிட்டுவிட்டனர் என்று நன்கு தெரிந்தது, ஆனாலும் எங்கள் வீரர்கள் அதனை முடிந்தவரை தடுத்து நிறுத்தினார்கள். அதுமட்டுமின்றி, நாங்கள் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.”

“நான் ரன் – அவுட் ஆவேன் என்று சத்தியமாக நினைத்து கூட பார்க்கவில்லை. அதுதான் போட்டியின் மாற்றாக மாறியது. ஆனால் போவெல் முடிந்தவரை ரன்களை அடித்து வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். எங்களுது பவுலிங்கில் அகில் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. உண்மையை சொல்ல போனால் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் சொல்லியே ஆக வேண்டும்.”

“நாளை நடைபெற உள்ள போட்டியில் ஒரு அணியாக வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது, அதனால் அணியில் விளையாடாத மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் நிக்கோலஸ் பூரான்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img