போட்டியின் வெற்றி தோல்வியை முடிவு செய்வது இதுதான் ; ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஓபன் டாக் ;

0

ஒருவழியாக ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. நாளை இரவு அஹமதாபாத்-ல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.

Qualifier 1 போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அதனால் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நிச்சியமாக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் செய்ய போவதாக கூறினார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி இறுதி ஓவர் வரை விளையாடி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 157 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக ரஜத் 58 ரன்களையும், மேக்ஸ்வெல் 24 , டூப்ளஸிஸ் 25 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி காத்திருந்தது. ஏனென்றால் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார்கள்.

அதனால் வெறும் 3 விக்கெட்டை இழந்த நிலையில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதனால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் யார் இந்த முறை கோப்பையை வெல்ல போகிறார் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

புதிய அணியான குஜராத் அணி ஆ? அல்லது ஒரு முறை சாம்பியன் படத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆ ?? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்..!

போட்டி முடிந்த பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் கூறுகையில் ; ” இன்றைய போட்டி சற்று கடினமாக தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சீசனில் நாங்கள் முடிந்த வரை சிறப்பாக விளையாடி வந்துள்ளோம். ஐபிஎல் போட்டிகளில் நிச்சியமாக வெற்றி தோல்வி என்பது இருப்பது வழக்கம் தான்.”

“ஒரு சில போட்டிகளில் நாங்கள் தோல்வி பெற்றுள்ளோம். ஆனால் அதில் இருந்த தவறுகளை சரி செய்து முன்னேறிக்கொண்டு தான் இதுவரை விளையாடி வருகிறோம். எங்களுக்கு நன்கு தெரியும் இறுதியில் தினேஷ் கார்த்திக் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இவர்கள் அணியில் இருக்கிறார்கள் என்று.”

“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் டாஸ் தான் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய போட்டியில் டாஸ் தான் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது. ஏனென்றால் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் அப்படியே வேற மாதிரியாக உள்ளது.”

“எங்கள் அணியில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகம் ஆனவர் Obed McCoy இதுவரை சிறப்பாக தான் விளையாடி வந்துள்ளார். நாங்கள் அவரது விளையாட்டை எப்பொழுது நம்பிக்கொண்டு தான் வருகிறோம். அதேபோல ஜோஸ் பட்லர் எங்கள் அணியில் இருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here